பரியேறும் பெருமாள் படம் பார்த்து நெகிழ்ந்த ஜான் பாண்டியன்!

0

 470 total views,  1 views today

தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் பரியேறும் பெருமாள் படத்தை பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார்.

சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றபடம் பரியேறும் பெருமாள்.
பா.இரஞ்சித் தயாரிப்பில் மாரிசெல்வராஜ் இயக்கியிருக்கும் திரைப்படத்தை சமீபத்தில் அரசியல் தலைவர்கள் பலரும் பார்த்துவிட்டு பாராட்டி வருகின்றனர்.

இன்னிலையில் நேற்று டெல்லியில் படம் பார்த்த ஜான் பாண்டியன் படம் பார்த்து முடிந்த உடன் தயாரிப்பாளர் பா.இரஞ்சித்தையும், மாரிசெல்வராஜையும் வெகுவாக பாராட்டியுள்ளார்.

குறிப்பாக டெல்லியில் படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடுவதை கண்டு தனது மகிழ்சியையும் தெரிவித்துள்ளார்.

படம் குறித்து பேசிய ஜான் பாண்டியன் … சமூகத்துக்கு அவசியமான படத்தை எடுத்திருக்கிறீர்கள் , பலவருடங்களுக்குபிறகு நான் பார்த்து ரசித்த படம் இது, நான் மிகவும் நெகிழ்ந்துவிட்டேன். மக்களோடு மக்களாக இந்த படத்தை பார்த்தது பெரும் மகிழ்வாக இருந்தது. இதுபோன்ற திரைப்படங்களை தொடர்ந்து எடுக்கள் அண்ணன் துணை இருப்பேன் என்று தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.
பலதரப்பட்ட மக்களிடமிருந்து வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் வந்துகொண்டிருப்பதால் தயாரிப்பாளர் பா.இரஞ்சித் , மாரிசெல்வராஜ் மற்றும் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Share.

Comments are closed.