கார்த்தி அக்காவாக ஜோதிகா நடிக்கும் படம்!

0

 709 total views,  1 views today


‘வயாகம்18 ஸ்டூடியோஸ்’ , ‘பேரலல் மைண்ட்ஸ்’ இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில்  கார்த்தி அக்காவாக ஜோதிகா நடிக்கும் புதிய படம் கோவாவில் ஆரம்பம். ஜீத்து ஜோசப் இயக்குகிறார். கார்த்தி அக்காவாக ஜோதிகா நடிக்கும் பெயரிடபடாத “கார்த்தி/ஜோதிகா” இப்படத்தின் முதல் பார்வை அதிகாரப்பூர்வமாக வெளியானவுடனே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இப்படத்தை மிகவும் புகழ்பெற்ற (த்ரிஷ்யம், பாபநாசம் புகழ்) இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்குகிறார். பேரலல் மைண்ட்ஸ் புரொடக்‌ஷன் சூரஜ், ‘வயாகாம்18 ஸ்டூடியோஸ்’ உடன் இணைந்து தயாரிக்கிறார். சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்க, அவருடன் ஆன்சன் பால்  (ரெமோ, மாபெரும் வெற்றிபெற்ற ஆப்ரஹாமிண்டே சந்ததிகள் புகழ்) மற்றும் இன்னும் சிலரும் விரைவில் இணைவார்கள்.கோவிந்த் வசந்த் (96 புகழ்) இசையமைக்க, ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கோவாவில் நேற்று தொடங்கியது. 2019 அக்டோபரில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

 
Share.

Comments are closed.