Sunday, July 19

இயக்குநர் சிகரம்” கே.பாலசந்தரின் 96ஆவது பிறந்த நாள் விழா!

Loading

இயக்குநர் சிகரம்” கே.பாலசந்தர் அவர்களின் 96-வது பிறந்த நாள் விழா நிகழ்ச்சி:-*
***********************************

*10-07-2026, இன்றைய தினம், “கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்கம் சார்பாக,சங்கத்தின் தலைவர் திரு.நாகா அவர்களின் தலைமையில், செயலாளர் கவிதாலயா வீ.பாபு அவர்களின் மேற்பார்வையில்,*
*”இயக்குநர் சிகரம்” கே.பாலசந்தர் அவர்களின் 96-வது பிறந்தநாளை முன்னிட்டு நாளை காலை 09 to 9-30 மணி அளவில் ஆழ்வார் பேட்டை காவேரி மருத்துவமனை மற்றும் ஆஞ்சநேயர் கோவில் அருகில், சாலை நடுவில் அமைந்துள்ள 1000-சதுரடி பூங்காவில், “இயக்குநர் சிகரம்” கே.பாலசந்தர் போக்குவரத்து தீவு என பெயர் பலகை நிறுவப்பட்டுள்ள இடத்தில், “கே.பாலசந்தர் திருஉருவ படத்திற்கு, “கே.பாலசந்தர் அவர்களின் மகள் திருமதி.புஷ்பா கந்தசாமியும், மருமகன் திரு.கந்தசாமி அவர்களும், திரையுலக பிரபலங்களும்,மைலாப்பூர் மாநகராட்சியின்* *அதிகாரிகளும், AE,EE,அவர்களும், மற்றும் கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்க நிர்வாகிகளும், ரசிகர்களும் இணைந்து மலர் மாலை சூட்டி,மலர் தூவியும்,பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்படுகிறது.பிறகு 9-30 to 10- மணிக்குள்”நடிகர், கமலஹாசனின் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான* *ராஜ்கமல் பிலிம்ஸ் வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள “கே.பாலசந்தர் திரு உருவ சிலைக்கு மலர் மாலை சூட்டி மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கப்படுகிறது.பிறகு பகல்12 to 12-30,மணிக்குள் கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்கம் சார்பாக சங்க நிர்வாகிகளும், தமிழ் திரையுலகை சார்ந்த சில பிரபலங்களும் இணைந்து தேனாம்பேட்டை டாக்டர் தாமஸ் சாலையில் அமைந்துள்ள*
*”ஸ்ரீ நாகாத்தம்மன் கோவில் அருகில் பொதுமக்களுக்கு இனிப்புடன் அன்னதானம் வழங்கப்படுகிறது.* இங்ஙனம்,
*கவிதாலயா வீ.பாபு,*
(பொதுச்செயலாளர்).