Skip to content
Monday, December 8
  • Home
  • News
  • Photos
  • Videos
  • Movies
  • Audio Launch
  • Articles
  • Reviews
  • Trailer
  • Cinema Books

Kabilan Vairamuthu Thanks Letter

December 8, 2017 by
0
SHARES
FacebookTwitter

Loading

ஒரு தனியார் செய்தித் தொலைக்காட்சியின் பணியில் இருந்து விடைபெற்று தமிழ் திரையுலகில் முழு நேர எழுத்தாளராக வேண்டும் என்ற விருப்பத்தோட இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு பயணம் தொடங்கினேன். என் பயணத்திற்கு அர்த்தமுள்ள தொடக்கத்தைத் தந்திருக்கிறது 2017ஆம் ஆண்டு. நல்ல உள்ளங்கள் சிலருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்.

மெய்நிகரி என்ற என் நாவல் இயக்குநர் திரு.கே.வி.ஆனந்த் அவர்களின் கவனத்தைக் கவர்ந்ததும் அதுவே ‘கவண்’ என்ற திரைப்படத்திற்கான தொடக்கப்புள்ளியாக அமைந்ததும் நிறைவான ஆரம்பம். திலக் (விஜய் சேதுபதி), அப்துல் (விக்ராந்த்), மலர்(மடோனா), மயில்வாகனன் (டி.ஆர்) என்ற கதாபாத்திரங்களின் வழி நிகழ்காலத்தின் பல்வேறு குரல்களை நாங்கள் உருவாக்கிய பொழுதுகளும் அந்த கதாபாத்திரங்களுக்கு திரைக்கதையும் வசனமும் எழுதிய நாட்களும் மறக்க முடியாதவை. கே.வி.ஆனந்த் அவர்களுக்கும் மூத்த எழுத்தாளர்கள் சுபா அவர்களுக்கும் என் நன்றிகள்.

தல அஜித் அவர்கள் நடித்த ‘விவேகம்’ ஒரு புதுமையான அனுபவம். சர்வதேச அதிரடிப்படை, அவர்களின் அதிநவீன செயல்பாடுகள்,உலகளாவிய அதிகாரச் சமூகம்,அணு ஆயுத பின்னணி, செயற்கை பூகம்பம் என முற்றிலும் மாறுபட்ட களம். இந்த கதைக்களம் தொடர்பான ஆராய்ச்சிக்கும், திரைக்கதை மற்றும் உரையாடலுக்கும் பங்களித்ததில் மகிழ்ச்சி. இனிய நண்பர் சிவா அவர்களுக்கு நன்றி.

இந்த ஆண்டு எழுதிய ஒரு சில பாடல்களில் “ஆக்சிஜன் தந்தாயே” மற்றும் “காதலாட காதலாட காத்திருந்தேனே” பாடல்கள் மனதிற்கு நெருக்கமானவை. பணமதிப்பிழப்பு (demonetization anthem) குறித்து நான் எழுதி நடிகர் சிம்பு பாடிய பாடல் இயல்பானதொரு பிரதிபலிப்பாக அமைந்தது. “தட்றோம் தூக்றோம்” என்ற படத்திற்காக இந்தப் பாடலை உருவாக்கியிருக்கிறோம். பாடலில் இருப்பதுபோலவே படத்தின் வசனங்களிலும் சில எதார்த்தங்களைப் பதிவு செய்திருக்கிறேன். இன்று படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது. அறிமுக இயக்குநர் அருள் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்தும்.

இளைஞர்களின் அரசியல் குறித்து நானும் என் நண்பர்களும் உருவாக்கிய “இளைஞர்கள் என்னும் நாம்” என்ற ஆவணப்படத்தை சமூகப் பயனுள்ள பதிவாகக் கருதுகிறேன். இதனை வெளியிட்டு சிறப்பித்த இயக்குநர் முருகதாஸ் அவர்களுக்கு மிகுந்த நன்றிகள்.

2017 ஆம் ஆண்டு தந்த படிப்பினைகளோடு புதிய பல படங்களில் பணியாற்றிக்கொண்டிருக்கிறேன். என் எல்லா முயற்சிகளையும் அடையாளம் கண்டு அதை பாராட்டிய – ஆலோசனை சொன்ன – ஆக்கபூர்வமாக விமர்சனம் செய்த அனைத்து ஊடக நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

அன்புடன்

கபிலன்வைரமுத்து

Related posts:

பூஜையுடன் தொடங்கிய சூர்யா 47

தடைகளை தாண்டி படங்களுக்கு பாடல்களை எழுதி வரும்கவிஞர் கருணாகரன்!

மறு வெளியீடு செய்யப்படும் 'படையப்பா' திரைப்படம்!

'சின்ன சின்ன ஆசை' படத்தின் செகண்ட் லுக் போஸ்டர்!

Posted in News
Prevஅதர்வாவின் ஜோடியாக ஹன்சிகா
Next“ வீரத்தேவன் “

Recent Posts

பூஜையுடன் தொடங்கிய சூர்யா 47

பூஜையுடன் தொடங்கிய சூர்யா 47

December 7, 2025 by Raja Senthilnathan
தடைகளை தாண்டி படங்களுக்கு பாடல்களை எழுதி வரும்கவிஞர் கருணாகரன்!

தடைகளை தாண்டி படங்களுக்கு பாடல்களை எழுதி வரும்கவிஞர் கருணாகரன்!

December 6, 2025 by Raja Senthilnathan

‘தேசிய தலைவர்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகமாக உருவாகும் ‘பசும்பொன் சித்தர்’!

December 6, 2025 by Raja Senthilnathan
மறு வெளியீடு செய்யப்படும் ‘படையப்பா’ திரைப்படம்!

மறு வெளியீடு செய்யப்படும் ‘படையப்பா’ திரைப்படம்!

December 6, 2025 by Raja Senthilnathan
‘சின்ன சின்ன ஆசை’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர்!

‘சின்ன சின்ன ஆசை’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர்!

December 6, 2025 by Raja Senthilnathan

‘த்ரிஷ்யம்’ போன்ற கதைகளைக்கு முடிவு என்பதே கிடையாது!

December 6, 2025 by Raja Senthilnathan
கட்டிப்பிடித்து நடிக்க மறுத்த கதாநாயகன்!

கட்டிப்பிடித்து நடிக்க மறுத்த கதாநாயகன்!

December 6, 2025 by Raja Senthilnathan
‘மூன்வாக்’ படத்திற்காக ஐந்து பாடல்களை பாடிய ஏ. ஆர். ரஹ்மான் !

‘மூன்வாக்’ படத்திற்காக ஐந்து பாடல்களை பாடிய ஏ. ஆர். ரஹ்மான் !

December 6, 2025 by Raja Senthilnathan
GV Prakash Kumar-Sri Gouri Priya starrer “Happy Raj” Title Announcement!

GV Prakash Kumar-Sri Gouri Priya starrer “Happy Raj” Title Announcement!

December 6, 2025 by Raja Senthilnathan
JioStar Leadership Team Meets Hon’ble Chief Minister Thiru. M.K. Stalin Ahead of ‘JioHotstar South Unbound’ Event!

JioStar Leadership Team Meets Hon’ble Chief Minister Thiru. M.K. Stalin Ahead of ‘JioHotstar South Unbound’ Event!

December 5, 2025 by Raja Senthilnathan
IMAX bookings for AVATAR: FIRE AND ASH open nationwide TODAY!

IMAX bookings for AVATAR: FIRE AND ASH open nationwide TODAY!

December 5, 2025 by Raja Senthilnathan
ஒரு வாரத்தில் ரூ.118.76 கோடி வசூல் செய்த தனுஷ் நடித்த ஹிந்தி படம்!

ஒரு வாரத்தில் ரூ.118.76 கோடி வசூல் செய்த தனுஷ் நடித்த ஹிந்தி படம்!

December 5, 2025 by Raja Senthilnathan
சாவீ _ விமர்சனம்

சாவீ _ விமர்சனம்

December 5, 2025 by Raja Senthilnathan
சாரா_ விமர்சனம்

சாரா_ விமர்சனம்

December 5, 2025 by Raja Senthilnathan

ஏவி.எம். சரவணன் மறைவுக்கு டி.ஆர். இரங்கல் செய்தி

December 4, 2025 by Raja Senthilnathan
WordPress Theme | Viral by HashThemes
Like Us
Follow Us
Subscribe Us
Follow Us