நாட்டுக்கு அவசியமான படம் ‘கடைசி எச்சரிக்கை’ – சீமான்!

0

 415 total views,  1 views today

கடைசி எச்சரிக்கை படத்தின் ட்ரைலரை வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், இயக்குநருமான சீமான்.

சுகுமார் கணேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள 35 நிமிட குறும்படம் கடைசி எச்சரிக்கை. பேருக்கு தான் இது குறும்படமே தவிர ஒரு முழு நீள படத்திற்கான அம்சங்களுடன், நகைச்சுவையாக உருவாக்கப்பட்ட விழிப்புணர்வு படம் இது. படத்தை பார்த்த திரையுலக பிரமுகர்கள் அனைவருமே வெகுவாக பாராட்டினர்.

டவுட் செந்தில் நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தின் போஸ்டரை இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான வேல்ராஜ் வெளியிட்டார்.

படத்தின் முதல் டீசரை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு வெளியிட்டு வாழ்த்தினார். படத்தின் பாடலை இசையமைப்பாளரும், முன்னணி நடிகருமான ஜி வி பிரகாஷ்குமார் வெளியிட்டு வாழ்த்தினார்.

விரைவில் படம் வெளியாகவுள்ள நிலையில் அதன் டிரைலரை திரைப்பட இயக்குநரும், நாம் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை வெளியிட்டார்.

இந்தப் படத்தையும் அதன் ட்ரைலரையும் பார்த்த சீமான், “இன்றைய சூழலில் அனைவருக்குமே தேவையான படம் கடைசி எச்சரிக்கை, தம்பி சுகுமார் கணேசன் இந்தப் படத்தை எடுத்திருந்த விதம், நகைச்சுவை தடவி அவர் கொடுத்திருக்கும் செய்தி மிக முக்கியமானது. அனைவருக்கும் போய் சேரவேண்டிய ஒன்று. இந்தப் படம் பெரிய வரவேற்பை பெரும் என்ற நம்பிக்கை இருக்கிறது,” என்று வாழ்த்தினார்.

AIS நோபல் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு வி சந்திர சேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார், கலை ஏ மாரியப்பன், மக்கள் தொடர்பு எஸ் ஷங்கர். தயாரிப்பு வி சீனிவாசன், கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியுள்ளார் சுகுமார் கணேசன்.

இந்த படத்தை நேரடியாக திரையரங்குகளில் வெளியிடும் முயற்சியில் உள்ளார் அதன் தயாரிப்பாளர்.

Share.

Comments are closed.