இலங்கை குண்டுவெடிப்பில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு எம்.எல்.ஏ. கருணாஸ் கண்டனம்!

0

 700 total views,  1 views today

இலங்கையில் தேவாலயங்கள் நட்சத்திர விடுதிகளில் என தொடர்ச்சியாக நடந்தேறிய குண்டு வெடிப்பு பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம் உள்ளிட்ட மூன்று தேவாலயங்கள் கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர விடுதிகள் என ஆறு இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதுவரை 130 பேர் பலியாகியுள்ளனர். கிறித்தவ பெருமக்கள் கொண்டாடும் ” உயிர்த்தெழும் ஞாயிறு” நாளான இன்று (21.4.2019) உயிர்ப்பறிக்கும் நாளாக மாறியிருப்பது வேதனை யளிக்கிறது.
உலகம் முழுவதும் இன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படும் அதே வேளையில். இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ மக்கள் தேவாலயங்களுக்கு சென்று வழிபாட்டில் நேரத்தில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. இதை யார் செய்திருந்தாலும் அவர்கள் மன்னிக்க முடியாத குற்றவாளிகள்! அவர்களின் இந்த கொடூரச்செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. யாராக இருப்பினும் உடனடியாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்க இலங்கை அரசு விரைவாக செயலாற்ற வேண்டும்.
கடந்த 11.04.2019 அன்று தவ் இத் ஜமாஅத் அமைப்பினர் இலங்கைக்குள் ஊடுருவியிருப்பதாகவும், அவர்கள் தாக்குதல் நடத்தக்கூடும் என்றும் தேசிய பாதுகாப்பு புலனாய்வு பிரிவு ஏற்கனவே எச்சரித்துள்ளது.
இலங்கையில் இன்று அதிர வைத்துள்ள குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் முன்கூடிய எச்சரிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்வதற்கு திட்டமிட்டதாக அரசாங்க புலனாய்வு பிரிவினால், பாதுகாப்பு அமைச்சிற்கு எச்சரிக்கை அறிக்கை ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
ஏன் தேவையான முன்னச்சரிக்கை நடவடிக்கைகளை பாதுகாப்பு அமைச்சரகம் செய்யவில்லை என்பது கேள்விக்குரியாக உள்ளது! பாதுகாப்பு அமைப்பின் இது தொடர்பில் காவல்துறை தலைவரிடம் கடிதம் மூலம் தகவல்கள் வழங்கப்பட்டும் முன் நடவடிக்கை இல்லை என்பதே சந்தேகமாக உள்ளது.
இலங்கைக்கு வெளியிலுள்ள பயங்கரவாத அமைப்பு ஒன்றினால் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாக புலனாய்வுத் தகவல்கள் சுட்டிக்காட்டியும் நடவடிக்கை எடுக்காததின் விளைவு அப்பாவி 140க்கும் மேற்பட்ட பொதுமக்களை பலிகொண்டி ருக்கிறது. குண்டுவெடிப்பு நடந்த பகுதி பெரும்பாலும் தமிழர்கள் வாழும் பகுதியாகும்.
இந்த வன்முறை கோரத்தாண்டவத்தில் ஈடுபட்ட யாவரும் சட்டப்படி தண்டனைக்குரியோர் அவர்களை உடனடியாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேசமயம் இலங்கை அரசு புலனாய்வு பிரிவின் தகவல்களை உரியவாறு மதிப்பளிக்காத இலங்கை அரசின் மெத்தனப்போக்கும் கண்டிக்கத் தக்கதாகும்.
இவ்வாறு எம்.எல்.ஏ., கருணாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Share.

Comments are closed.