அன்புடையீர்,
நாளை உலக புற்று நோய் தினம். இதை வலியறுத்த எங்களது Life Again Foundation வெற்றியாளர்களின் நடை- Winner’s Walk என்ற தொடர் நடை நிகழ்வை நாளை காலை 7 மணிக்கு அடையார் ஆல்காட் பள்ளி வளாகத்தில் உள்ளது.
இன்றைய நடைமுறை உலகில் தவிர்க்க முடியாத நோய்களில் ஒன்றாக உள்ளது புற்றுநோய். இந்தியர்களான நாம் அன்றாடம் பலத்தரப்பட்ட புற்றுநோய்களுக்கு ஆளாகும் நிலையில் இருக்கிறோம். இதை எதிர் கொள்வதற்கு நம்மிடமுள்ள மிகப்பெரிய ஆயுதம் அதை பற்றி அறிந்து கொள்வதும் அதற்காக தயாராக இருப்பதும் தான். உறுதியான மனதும், உடனடியாக அணுகுமுறையும் எந்த ஒரு சவாலையும் எதிர்கொள்ள இன்றியமையாதவை. புற்றுநோயை விடவும் பெரிய போராட்டமும் சவாலும் எதுவும் கிடையாது. இந்த புற்றுநொயை உண்மையான உறுதியுடனும் புன்னகையுடனும் தைரியத்துடனும் எதிர்கொண்டு வென்ற நாயகர்கள் பலர் உண்டு. இவர்களே எனக்கு மிகப்பெரிய முன்னுதாரணங்கள்.
எங்களது இந்த வெற்றியாளர் நடை – Winner’s Walk- இந்த நாயகர்களை முன்னிறுத்தி ஒவ்வொருவருக்கும் தங்களையும் தங்களது அன்புக்குடையவர்களையும் புற்றுநோயை எதிர்கொள்ள தயார்படுத்தி கொள்ள உதவும். புற்றுநோயின் சவாலை எதிர்கொள்ள நம்மை தயார்படுத்தி கொள்வது வாழ்க்கையின் மற்ற ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட சவால்களை எதிர்கொள்ள உதவும்.
உங்கள் உற்றார் உறவினருடன், குடும்பத்தினருடனும் மற்றும், நண்பர்களுடனும் வந்து எங்களுடன் கலந்து கொள்ளுங்கள். எங்களுடன் நடந்து பல உயிர்களை காப்பாற்ற முன் வாருங்கள்.
அன்புடன்
உங்கள் கெளதமி