எந்த ஒரு பின்னணியும் இல்லாமல், பண பலமோ, பிரபலமான குடும்பத்தைச் சேர்ந்தவரோ இல்லாமல், கட்சி பலம், என்று எதுவுமே இல்லாத அடித்தட்டு மக்களின் நடுவில் இருந்து வந்து சாதித்த முதல் தலைமுறையினரை பாராட்டி வாழ்த்தி வருது வழங்கும் நிகழ்வு உணர்ச்சி பூர்வமாக நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக மக்கள் நீதி மையத்தின் தலைவர் உலக நாயகன் கமல்ஹாசன் கலந்து கொண்டு விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
விருது பெற்றவர்களை பாராட்டிப் பேசினார் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத் தலைவர் தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ்.
கவிஞர் சினேகன் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.