Wednesday, October 21

விஜய் & விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியுள்ள Master திரைப்படத்தை இலவசமாக பார்ப்பது எப்படி?

Loading

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தளபதி விஜய் & விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியுள்ள Master திரைப்படத்தை இலவசமாக பார்ப்பது எப்படி!

உங்கள் பட்ஜெட் குறைவாக உள்ளதா? ஆனால் அமேசான் பிரைம் வீடியோவில் சமீபத்திய மற்றும் பிரத்யேக வெளியீடுகளைக் கட்டாயம் காண விரும்புகிறீர்களா? சமீபத்திய அமேசான் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பில், உங்களுக்கு பிடித்த திரைப்படங்களையும் தொடர்களையும் ஒரு மாதத்திற்கு இலவசமாகப் பார்க்கலாம்!
தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ள அத்தகையதொரு திரைப்படம், தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோருடன் மாளவிகா மோஹனன், அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா ஜெரேமியா மற்றும் சாந்தனு பாக்யராஜ் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள Master ஆகும். இந்த ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார், இது மனச்சோர்வு காரணமாக மதுப்பழக்கத்திற்கு ஆளான ஒரு ஆளுமை மேம்பாட்டு பேராசிரியரான JD என்பவரின் கதையாகும். ஒரு சூழ்நிலையில் அவர் கல்லூரியிலிருந்து வெளியேறி, ஒரு சிறுவர் சீர்திருத்த மையத்தில் ஆசிரியராக வேலை செய்ய வேண்டிய நிலை உண்டாகிறது. அங்கு, தடுப்புக்காவலில் உள்ள சிறுவர்களை போதை பழக்கத்திற்கு அடிமையாக்கி, அவர்களை தவறான பணிகளில் ஒரு மோசமான தாதா ஈடுபட்டுவதை அவர் கண்டறிகிறார். அடுத்து என்ன நடந்தது என்பதை, அமேசான் பிரைம் வீடியோவின் மொபைல் பதிப்பில் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
பாக்ஸ் ஆபிஸில் 200 கோடிக்கு மேல் வசூலித்த பிறகு, 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள பிரைம் உறுப்பினர்களுக்காக, இந்த மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் வெளியாகியுள்ளது. நீங்கள் காத்திருந்த வார இறுதி இதே வந்துவிட்டது!
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த மெகா பிளாக் பஸ்டர் படம் இப்போது அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங்கிற்கு கிடைக்கிறது. இது உங்கள் வார இறுதியின் மகிழ்ச்சிக்கு மேலும் ஒரு காரணத்தைச் சேர்த்துள்ளது, இல்லையா?
அமேசான் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பு என்றால் என்ன?
ஏர்டெலுடன் இணைந்து, அமேசான் பிரைம் வீடியோ பிரைம் வீடியோ மொபைல் பதிப்பு திட்டத்தை வெறும் ரூ.89 முதல் துவங்கும் அறிமுக விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒற்றை பயனர் மொபைலுக்கு மட்டுமேயான திட்டமாகும், இது இந்தியாவில் பிரத்தியேகமாக துவக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக ஏர்டெல் பயனர்கள் அமேசான் பிரைம் வீடியோவை SD தரத்தில் ஸ்ட்ரீம் செய்ய முடியும். இது 1 மாத இலவச சோதனைக் காலத்துடன் வெளிவருவது குறிப்பிடத்தக்கதாகும்.

உங்களுக்கு பிடித்த உள்ளடக்கத்தை இலவசமாகப் பார்ப்பது எப்படி?
இந்தியாவில் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பு அறிமுகத்தின் ஒரு பகுதியாக, தொகுக்கப்பட்ட ப்ரீ-பெய்டு பேக்குகளில் உள்ள அனைத்து ஏர்டெல் வாடிக்கையாளர்களும் தங்கள் மொபைல் எண்ணைப் பயன்படுத்தி ஏர்டெல் தேங்க்ஸ் பயன்பாட்டிலிருந்து அமேசானில் பதிவுசெய்வதன் மூலம் 30 நாள் இலவச சோதனை முன்னொட்டத்தைப் பெறலாம். இதன் வழியாக, பார்வையாளர்கள் தங்களுக்கு பிடித்த நிகழ்ச்சிகளை ஒரு மாதத்திற்கு கூடுதல் கட்டணம் இல்லாமல் இலவசமாக அணுகலாம்.
உங்களை மகிழ்விக்கத்தக்க Master மற்றும் அதுபோன்ற பல சிறந்த திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை அமேசான் பிரைம் வீடியோவின் மொபைல் பதிப்பில் காணலாம், அதுவும் இலவசமாக!