![]()
ட்ரெண்டாகி வரும் வெற்றியின் “மெமரிஸ்” பர்ஸ்ட் லுக்!
நட்சத்திர நடிகர்கள் படங்கள் மட்டுமே எப்போது வரும் என அவர்தம் ரசிகர்கள் காத்திருப்பது வழக்கம். ஆனால் இரண்டே படங்களில்மட்டுமே நடித்த ஒரு வளரும் நடிகர், ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துவது என்பது மிகவும் அரிதான ஒன்று. எட்டு தோட்டாக்கள், ஜீவி என இரண்டு படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் அத்தகைய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருப்பவர் ஸ்திரமான வளர்ச்சியில் வீறு நடைபோடும் இளம் நடிகர் வெற்றி.
‘எட்டு தோட்டாக்கள்’, ‘ஜீவி’ என அவர் நடித்த இரண்டு படங்களும் வித்தியாசமான கதைக்களன் கொண்ட விறுவிறுப்பான படங்களாக அமைந்ததால் வர்த்தக ரீதியில் வெற்றி பெற்றதுடன், விமர்சன ரீதியிலும் பெரும் வரவேற்பைப் பெற்ற படங்களாக அமைந்தன.
தற்போது அவர் நடித்து வரும் “மெமரிஸ்” படம் ரசிகர்களிடைையே மட்டுமின்றி, திரையுலகைச் சேர்ந்தவர்களிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சிஜூதமீன்ஸ் பிலிம் பேக்டரி தயாரிக்க, ஷ்யாம் பிரவீன் இயக்கத்தில் வெற்றி நடித்து வரும் “மெமரிஸ்” படத்தின் போஸ்டரை சமீபத்தில் நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், வெளியிட்டார்.
இந்தப் போஸ்டரில் உள்ள “மெமரிஸ்” என்கிற டைட்டலுக்கேற்ற ஹீரோவின் டிசைனும், மெமரிஸ் குறித்த வாக்கியமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருப்பதால் இப்போது இந்தப் போஸ்டர் ட்ரெண்ட் ஆகி வருகிறது. மேலும் இந்தப் படத்தின் அடுத்தகட்ட பணிகள் குறித்த அறிவிப்புகளையும், சுவாரஸ்யமான தகவல்களையும் அடுத்தடுத்து வெளியிட இருக்கிறது “மெமரிஸ்” படக்குழு.





