சந்தோஷ் பிரதாப் சவதிஸ்டா நடிக்கும் ‘ஏன் கனவே’ ம்யூசிக் ஆல்பம்!

0

 29 total views,  1 views today

“சார்பட்டா” படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் “சந்தோஷ் பிரதாப்” இவர் தமிழில் மேலும் பல படங்களில் நடித்து வருகிறார், தற்போது இவர் “ஏன் கனவே” என்ற மியூசிக் ஆல்பம் ஒன்றில் நடித்து வருகிறார், இதில் சந்தோஷிர்க்கு ஜோடியாக புதுமுக நடிகை “சவதிஸ்டா” நடிக்கிறார்.

இந்த ஆல்பம் முழுக்க முழுக்க உயிருக்கு உயிராக காதலித்து திருமணம் செய்யும் புது மண தம்பதிகளுக்கு இடையே நடக்கும் சில சொல்லப்படாத பிரச்சனைகளை எடுத்துச் சொல்லும் வகையில் மிக எமோஷனலாக உருவாக்கப்பட்டு வருகிறது.

கிங்ஸ் பிக்சர்ஸ் வழங்க திரு.கௌரிசங்கர் தயாரிக்க பாடலாசிரியர் “முத்தமிழ்” பாடல் எழுத ஒளிப்பதிவு “சுந்தர்” கவனிக்க , “யாஞ்சி யாஞ்சி”, “ராசாளியே” “ஆளப்போறான் தமிழன் ” போன்ற பாடல்களைப் பாடிய “சத்யபிரகாஷ்” இந்த பாடலை பாடியுள்ளார், எடிட்டிங் “ரெஜிஷ்” செய்ய இந்த ஆல்பத்திற்கு இசையமைக்கிறார் “ராகேஷ்”, மற்றும் இளையதளபதி விஜய் நடித்த ஜில்லா, புலி போன்ற படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய டி.ஆர்.பாலா இந்த ஆல்பத்தை இயக்கியிருக்கிறார் இவர் 50க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பாடலின் இறுதிகட்ட பணிகள் நடைபெறுவதால் இந்த ஆல்பம் ஆயுத பூஜை தினத்தன்று வெளியாகும் என்று குழு அறிவித்துள்ளனர்.

மேலும் திரு.கௌரிசங்கர் தனது நிறுவனமான கிங் பிச்சர்ஸ் மூலமாக அடுத்து அடுத்து ஆல்பம் பாடல்கள், வெப்சீரியஸ் மற்றும் குறும்படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

Share.

Comments are closed.

CLOSE
CLOSE