மை கர்மா செயலி மூலம் களம் காணும் சுரேஷ் மேனன்

0

 352 total views,  1 views today

ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி, தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் பரிணாமம் பெற்று புதிய முகம் என்ற படத்தில் நாயகனாகவும் நடித்த சுரேஷ் மேனனுக்கு பல முகங்கள் உண்டு. முழு ஈடுபாட்டுடன் எந்தப் பணியைச் செய்தாலும் அதில் முத்திரை பதிக்கும் இவருக்குள் இருக்கும் சமூகப் பொறுப்புணர்வு அவ்வப்போதாவது வெளிப்பட்டுக்கொண்டிருக்கும்.
கன்ட்டெயினர் ஒன்றில் பெண்களுக்கான கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தி பொது பயன்பாட்டுக்கு வழங்கியது, நாளுக்கு நாள் மோசமாகும் சென்னை போக்குவரத்தை ஒழுங்கு படுத்தி எரிபொருள் மற்றும் நேரத்தை மிச்சப்படுத்தியது என்று பலவற்றையும் அடுக்கிக் கொண்டே போகலாம்.
இப்போது மை கர்மா என்ற செயலி மூலம் களமிறங்கியிருக்கிறார் சுரேஷ் மேனன். இது குறித்து நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது சுரேஷ் மேனன் கூறினார்…
நமது பண்பாடு கலாச்சாரம் குறித்து அதிகம் அக்கறை கொள்ளாமல், அது பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டாமல் ஒரு தலைமுறையே உருவாகிவிட்டது. மை கர்மா செயலியை மொபைல் போனில் யார் வேண்டுமானால் பதிவிறக்கம் செய்து கொண்டு நாங்கள் கேட்டுகும் கேள்விகளுக்கு பதில் சொல்லலாம். ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு பதில்களை நாங்களே தருகிறோம். அதில் ஒன்றை போட்டியாளர்கள் தேர்வு செய்ய வேண்டும்.
இந்த விளையாட்டில் பங்கு கொள்வதன் மூலம் பொழுதை பயனுள்ள வகையில் கழிப்பதுடன் அதிக பட்ச சரியான விடைகளைச் சொல்வதன் மூலம் பரிசுகளையும் பெறலாம். தினசரி பரிசுகள் வாராந்திர பரிசுகள் என்று பல பரிசுகள் வழங்கப்படும். அதிகபட்சமாக ஒருவர் ஒரு லட்சம்வரை வெல்லலாம்.
இந்த விளையாட்டில் பெங்கு பெறுவதன் மூலம் நமது பண்பாடு கலாச்சாரம் குறித்து தெரிந்து கொள்ளவும் முடியம். அதனால்தான் எந்த மாநிலத்து மக்களையும் சென்றடையும் வகையில் மை கார்மா என்று செயலிக்கு பெயர் வைத்திருக்கிறோம். இதன் மூலம் கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதியை சமூக செய்யும் தொண்டு நிறுவனங்களுக்கும் வழங்கவிருக்கிறோம் என்றார் சுரேஷ் மேனன்.

சுரேஷ் மேனன் முதல் கட்டமாக தேர்வு செய்திருக்கும் தொண்டு நிறுவனத்துக்கு ஏற்கெனவே பல வெளிநாட்டு உதவிகள் மற்றும் அரசு உதவிகள் கிடைத்து வரும் நிலையில் இவர் எந்த அடிப்படையில் இந்த நிறுவனத்தை தேர்வு செய்திருக்கிறார் என்பதுதான் கொஞ்சம் உறுத்தலாக இருக்கிறது.

Share.

Comments are closed.