பெர்சனல் கேர் தயாரிப்புகளில் களமிறங்கும் இந்தியாவின் நம்பர் ஒன் சலூன் நேச்சுரல்ஸ்

0

 223 total views,  2 views today

இந்தியாவின்  நம்பர் ஒன் அழகுப்படுத்தும் சலூன் நேச்சுரல்ஸ்,  பெர்சனல் கேர் பொருள்கள் தயாரிப்பு சந்தையில் பராமரிப்பு தயாரிப்பு சந்தையில் துணிகரமாக  கால்பதித்துள்ளது அனைவரும் நீண்ட காலம் எதிர்பார்த்த ஒன்றுதான்.  2000 ஆம் ஆண்டு நேச்சுரல்ஸ் தொடங்கப்பட்டதில் இருந்து இன்றுவரை வாடிக்கையாளரின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. குறிப்பாகப் பெண்களின் அழகை மேலும் மெருகேற்றி ஸ்டைலிங் செய்து சிறந்த சேவையை வழங்கி வருகிறது. இந்தியா முழுவதும் இயங்கி வரும் சுமார் 650க்கும் மேற்பட்ட சலூன்களில் பெண்களுக்கு அழகியல் தொடர்பான சிறப்பான சேவை செய்யப்பட்டு வருகிறது. இந்தத் துறையில் இரு தசாப்த கால அனுபவத்துடனும்,  சிறந்த சாதனைகளுடனும் பெர்சனல் கேர் பொருள்கள் தயாரிப்பில் களமிறங்குகிறது.

ஒவ்வொரு தயாரிப்பும் சர்வதேச தரத்திலான மூலப்பொருட்களுடன், பழங்களின் சாற்றில் இருந்து மிகுந்த அக்கறையுடன் தயாரிக்கப்படுகின்றன. எனவே ஒவ்வொரு தயாரிப்பும் சருமத்தைச் சுத்தப்படுத்துதல், ஈரப்பதத்தைத் தக்க வைத்தல், வடுக்களைக் குணமாக்குதல், அழகுபடுத்துதல் என முற்றிலுமாக அற்புதமாக அனுபவத்தைத் தரும். இந்தியாவின் தட்ப வெட்ப சூழலையும், சுற்றுச்சூழலையும் கருத்தில் கொண்டு, இங்கிருப்பவர்களின் சருமத்துக்கேற்ப சரும, முடி பராபரிப்பு பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. மேலும் இந்த தயாரிப்புகளை பட்டியலிடும் பிரசாரத்தின் பெயர் `அழகின் ஊட்டச்சத்து’ (Beauty Nutrition) என்பதாகும். அந்த அட்டவணையில் மொத்தம் தனித்துவமான, நன்கு முறைப்படுத்தப்பட்ட 14 தயாரிப்புகள் இடம்பெற்றுள்ளன.

ஹேசல்நட் இரவு க்ரீம் (Hazelnut Night Cream), பல்பி மேங்கோ பாடி ஸ்க்ரப் (Pulpy Mango Body Scrub), கோக்கோனட் – வெண்ணிலா கிரீம் (Coconut-Vanilla Hand & Foot cream) உள்ளிட்டவை சிறந்த தயாரிப்புகள் ஆகும். இந்த தயாரிப்புகளின் விலை 100 ரூபாயில் இருந்தே தொடங்குகிறது. அனைவராலும் வாங்கக் கூடிய விலையில், தலை முதல் கால் வரை பராமரிக்கும் பொருள்கள் கிடைக்கும்.

புதிய தயாரிப்புகள் குறித்துப் பேசிய நேச்சுரல்ஸ் நிறுவனர் வீணா குமாரவேல். “இந்த செல்ஃப் கேர் தயாரிப்புகள் இந்திய பெண்களின் சருமத்தை மட்டும் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டவை அல்ல. அவர்கள் மகிழ்ச்சி மற்றும் மனநிலையைக் கருத்தில் கொண்டும் தயாரிக்கப்பட்டுள்ளன. முழுவதுமாக பழ சாற்றிலும், இயற்கை மூலப்பொருள்களையும் கொண்டு தயாரிக்கப்பட்டதால், மனதைச் சுண்டி இழுக்கும் மணமும், சருமத்துக்குப் புத்துயிர் கொடுக்கும் தன்மையும் அவற்றில் இருக்கும். நம் அதிகாலையைப் புத்துணர்ச்சியாக்கும் க்ரீன் எலுமிச்சை பாடி வாஷ் தொடங்கி வார இறுதி நாட்களில் நம்மை ஜொலிக்க செய்யும் டமாஸ்க் ரோஜா மாய்ஸரைஸிங் சொர்பட் வரை இனி எங்களிடம் கிடைக்கும்’’ என்றார்.

நேச்சுரல்ஸ் தங்களின் புதிய தயாரிப்புகளை சென்னையில்  அறிமுகப்படுத்தியது. இந்த தயாரிப்புகளின் தூதுவராக இருந்து அவற்றை வெளியிட்டது நடிகை நிக்கி கல்ரானி ஆகும். சமூகத்தில் வேவ்வேறு நிலையில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணின் தனித்துவ அழகைக் கொண்டாடுவதற்காகவே இந்தத் துவக்க விழா.  அழகாக ஜொலிப்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் சொந்தமான ஒன்று என்பது நேச்சுரல்ஸின் நம்பிக்கை. எனவே வெவ்வேறு துறைகளில் இருந்து திறமையான பெண்களைத் தேர்வு செய்து நம் தயாரிப்புகளின் விளம்பர தூதுவராக்கி உள்ளோம். வெவேறு துறைகளில் இருந்து 10 பெண்கள் அறிமுக விழாவில் தூதுவர்களாக பங்குபெறுவார்கள்.  ஆரத்தி அருண், புகைப்பட கலைஞர் ஷனோன் ஸிர்கல், சிலம்பம் புகழ் ஐஷ்வர்யா மணிவண்ணன், கொடையாளர் சீமா ஆசிப் அலி, ஆடை வடிவமைப்பாளர் ஸ்ரேயா கருணாகரன் உள்ளிட்ட திறமையான பெண்கள் பங்குபெற்றனர்.

நேச்சுரல்ஸின் தயாரிப்புகள் ஆன்லைனில் அமேசானிலும், நேச்சுரல்ஸ் சலூன்களில் சில மல்டி பிராண்ட் கடைகளிலும் கிடைக்கும்.

நேச்சுரல்ஸ் பற்றி சில வரிகள்:

நேச்சுரல்ஸ்- இந்தியாவின் நம்பர் ஒன் யூனிசெக்ஸ் ஹேர் மற்றும் ப்யூட்டி சலூன், இந்திய அழகு நிலையம் துறையில் ஒரு முன்னோடியாக உள்ளது. இந்தியாவின் மிக முக்கியமான தலை சிறந்த சலூனாக வளர்ந்து வருகிறது.  நாடு முழுவதும் 650க்கும் மேற்பட்ட அழகு நிலையங்கள் உள்ளன. மேலும் இந்த எண்ணிக்கையை உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது. பெரும்பாலான நேச்சுரல்ஸ் சலூன்கள் பெண் தொழில் முனைவோரால் நடத்தப்படுகிறது. இதன்மூலம் பெண்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கவும்,  அவர்களின் லட்சியங்களை அடையவும் நேச்சுரல்ஸ் துணைபுரிகிறது. இந்த நிறுவனத்தில் ஆறு முக்கிய பிராண்டுகள் உள்ளன. ஒவ்வொன்றும்

 வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. நேச்சுரல்ஸ் யூனி செக்ஸ் சலூன், நேச்சுரல்ஸ் லவுஞ்ச், நேச்சுரல்ஸ் W, நேச்சுரல்ஸ் என்னேபல், திவா, பேஜ் 3 உள்ளிட்ட ஆறு பிராண்டுகள் உள்ளன. அனைவராலும் கொடுக்க முடிந்த விலையில், சிறப்பான சூழலில் தரமான சலூன் சேவையை கொடுப்பதே நேச்சுரல்ஸின் முதன்மை குறிக்கோள். மேலும் தகவல்களுக்கு .  http://www.naturals.in/ தளத்தைப் பார்க்கவும். 

 

Share.

Comments are closed.