![]()
வணக்கம்.
நான் சங்ககிரி ராஜ்குமார்…
எளிய மக்களின் வாழ்வியலை அவர்கள் வாழ்வு மேம்பட நாம் சொல்ல வேண்டிய செய்திகளை சினிமாவில் சொல்ல வேண்டும் என்று வெங்காயம் பையாஸ்கோப் படங்களை எடுத்திருந்தேன்.
இந்நிலையில் பெரிய பொருட்சளவில் எடுக்கப்படும் திரைப்படங்கள் வியாபார நோக்கமே முதன்மையாக கொண்டிருப்பதால் மக்களுக்கான பிரச்சனையை பேசுகின்ற படங்கள் உலகெங்கும் இன்டிபென்டன்ட் படங்களாகவே இருக்கிறது. அவ்வகையில் இன்டிபென்டென்ட் ஆக படங்களை உருவாக்க தான் நினைக்கும் கருத்துக்களை உலகத்திற்கு கொண்டு செல்ல தனி ஒரு மனிதனால் முடியும் என்று ஒன் மேன் திரைப்படத்தை எடுத்து முடித்திருக்கிறேன். இது கதை உருவாக்கத்தில் தொடங்கி திரைக்கதை, வசனம், மேக்கப் , காஸ்டியூம், கிரேன் ட்ராலி மூவ்மெண்ட், ஒளிப்பதிவு, லைட்டிங், எடிட்டிங் டப்பிங், 3d மாடலிங், டெக்சரிங், அனிமேஷன், காம்போசிட், கலர் கரெக்ஷன் என ஒரு திரைப்படத்திற்கு தேவையான அனைத்து வேலைகளையும் யாருடைய உதவியும் இன்றி தனி ஒருவனாக எடுத்து முடித்திருக்கிறேன். இதற்கான படப்பிடிப்பு இந்தியாவில் தொடங்கி மலேசியா, தாய்லாந்து, பிரான்ஸ், இத்தாலி, வாட்டிகன், மற்றும் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் நடத்தி முடித்தேன். தனி ஒருவனாக செய்து முடித்ததை தொடக்க முதல் இறுதி வரை மற்றொரு கேமராவில் பதிவு செய்து வைத்திருக்கிறேன். இத்திரைப்படம் உருவான விதத்தையும் அதன் சில காட்சிகளையும் அறிமுக வீடியோவாக வெளியிட்டு இருக்கிறேன்.

