Friday, November 14

பாலம் கலியாணசுந்தரம் வாழ்க்கை படமாகிறது!

Loading

ஐயா பாலம் கலியாணசுந்தரம் அவர்களின் வாழ்க்கை வரலாறு ஹிந்தி தமிழ் உட்பட பல மொழிகளில் திரைப்படமாக உருவாக்க உள்ளது !

இவர் கல்வியாளர், மிகச்சிறந்த சமூக ஆர்வலர், அன்பு பாலம் மாத இதழின் ஆசிரியர், பத்திரிகையாளர் குரல் மாத இதழின் கௌரவ ஆசிரியர், மற்றும் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் ( TUJ ) கௌரவ ஆலோசகர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல ஹிந்தி சினிமா தயாரிப்பாளர் பரன் ஆதர்ஷ் அவர்கள் இவருடைய வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்க உள்ளார்.

இவருடைய வாழ்க்கை வரலாறு புத்தகம் ஆங்கிலத்தில் உள்ளதை படித்து தெரிந்து கொண்ட அமிதாப்பச்சன் நெகிழ்ந்து போனார்.

இதனால் ஐயா பாலம் கலியாணசுந்தரம் அவர்களின் வாழ்க்கை வரலாறு படத்தில் அவருடைய கதாபாத்திரத்தில் அமிதாப்பச்சன் நடிக்க உள்ளார்.

இளம் வயதில் வரும் கதாபாத்திரத்தில் அபிஷேக்பச்சன் நடிக்க உள்ளார்.

இளம் வயதில் வரும் தாயாக வித்யாபாலன் நடிக்க உள்ளார்.

இந்தி, தமிழ் உட்பட பல மொழிகளில் திரைப்படமாக உருவாக்க உள்ளது.

திரைப்பட குழுவினர்களுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்த தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் அவர்கள், மேலும் கூறுகையில் ” எங்கள் ஐயா பாலம் கலியாணசுந்தரம் அவர்களின் வாழ்க்கையை திரைப்படம் மூலம் இந்த உலகிற்கு கொண்டு செல்லும் உங்கள் அனைவருக்கும் தமிழர்கள் நாங்கள் அனைவரும் நன்றிக் கடன் பெற்றுள்ளோம் ” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த திரைப்படம் அவருடைய வாழ்க்கை கதை என்பதால் அவருக்கு ராயல்டியாக ஒரு பெரிய தொகை வழங்கும் திட்டத்தில் தயாரிப்பு நிறுவனம் உள்ளன.

ஆனால் தனக்கு கொடுக்கப்பட்ட 30 கோடியையே கல்விக்கு தானமாக கொடுத்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சில காலம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் இல்லத்தில் இவர் இருந்தார்.

ரஜினி அவர்கள் தனது தந்தையாக இவரை தத்து எடுத்துக் கொண்டார்.

இதன் காட்சிகள் ரஜினி சார் இல்லத்தில் எடுக்கப்பட்ட வாய்ப்புகள் உள்ளன.

இப்படத்தின் பணிகளை சென்னையில் உள்ள தயாரிப்பாளர் முகேஷ் ( பரன் ஆதர்ஷ் அவர்களின் நன்பர் ) அவர்கள் கவனித்து வருகிறார்.”