Wednesday, April 30

இதோ இன்னொரு கலைக்குடும்பம்!

Loading

செயலி அடிப்படையில் உருவாக்கப்பட்ட பப்ஜி என்கிற விளையாட்டு இன்றைய இளைஞர்களை ஆட்கொண்டு, ஆட்டிப் படைக்கிறது. இந்த விளையாட்டுக்கு அடிமையாகி, இரவு பகல் பார்க்காமல் யாராவது ஒருவர் விளையாடிக் கொண்டிருப்தை பல வீடுகளிலும் பார்க்கலாம்.

தாதா 87 என்ற வித்தியாசமான படத்தின் மூலம் அறிமுகமான இயக்குநர் விஜய் ஸ்ரீஜி, இந்த விளையாட்டு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு படத்தை உருவாக்கி வருகிறார். பொல்லாத உலகில் பயங்கர மேம் என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தின் பெயரில் உள்ள ஆங்கில முதல் எழுத்துக்களை சேர்தால் pubg என்று வருவது ஒரு சிறப்பம்சம்.

இன்னொரு சிறப்பம்சமாக சீயான் விக்ரமின் தங்கை மகன் அர்ஜூமன் இப்படத்தில் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். வாள் பயிற்சி , குதிரையேற்றம், கராத்தே மற்றும் நடனம் ஆகியவற்றில் முறையான பயிற்சி பெற்றிருக்கும் அர்ஜூமன் இப்படத்தின்மூலம் அறிமுகமாகிறார்.

நட்சத்திர நாயகர்களி்ல் ஒருவராக சீயான் விக்ரம் கோலோச்சிக் கொண்டிருக்கும்போதே அவரது மகன் துருவ் ஆதித்ய வர்மா படத்தில் அறிமுகமாகும் நிலையில், இப்போது தங்கை மகன் அர்ஜுமனும் நடிக்க வந்திருக்கிறார். ஆக தமிழ் சினிமாவில் மற்றொரு கலைக்குடும்பம் மலர்ந்திருக்கிறது.

வாருங்கள் இளைய தலைமுறையே… உங்களை வாழ்த்தி வரவேற்க ரசிகர்கள் தயாராக இருக்கிறார்கள்.