Wednesday, October 29

தமிழ் சினிமாவில் ஏமாற்றுகாரர்களே அதிகம்!

Loading

தமிழ் சினிமாவில் ஏமாற்றுகாரர்களே அதிகம் : பணமே இல்லாதவன் தான் தமிழ் சினிமாவின் தயாரிப்பாளர்!

பகல் கனவு (Pagal Kanavu) திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வளசரவாக்கத்தில் உள்ள AVK அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.விழாவில் தயாரிப்பாளர் R K அன்பழகன் ,நடிகை ஷகிலா,நடிகர் கராத்தே ராஜா, இப்படத்தில் இயக்குனர்,நடிகர்,தயாரிப்பாளர் Faisal Raj மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

Tamilnadu Film Small Producers Association தலைவர் R K அன்பழகன் பேசிய போது தனது சிறு வயதில் (20 வயதில்) நடிகை சகீலாவின் ‘ஜல்லிக்கட்டு காளை’ போன்ற திரைப்படங்களின் சுவரொட்டிகளைப் பார்த்து சினிமா மீது கொண்ட ஆழமான ஆசையையும், கவுண்டமணியின் நகைச்சுவை மீதான மாறாத பாசத்தையும் வெளிப்படுத்தினார்.ஜல்லிக்கட்டுக் காளை” திரைப்படத்தில் நடிகை சகீலாவின் நடிப்பு (குறிப்பாக, கவுண்டமணி பொண்ணு பார்க்க வரும் காட்சி) பற்றிப் பேசினார். இந்த ஆசையின் வெளிப்பாடாகவே, ‘பகல் கனவு’ திரைப்பட விழாவில், முன்னாள் கதாநாயகி சகீலாவை அழைக்கக் கோரியதன் காரணத்தையும் விளக்கினார். இன்றைய கதாநாயகிகளை விட சகீலாவுக்கு இருந்த உண்மையான ரசிகர் பட்டாளம், படத்திற்குப் பெரிய வெளிச்சத்தைக் கொடுக்கும் என்ற நம்பிக்கையே காரணம் என்று கூறினார்.மேலும் தான் என்றுமே கவுண்டமணியின் தீவிர வாழ்நாள் ரசிகர் என்பதையும் கூறினார்.

மேலும் சினிமாவின் தற்போதைய நிலை மற்றும் உழைப்பின் அவசியம் பற்றியும் கூறினார்.

ஒரு படம் உருவாகும்போது, அதில் நடித்த அத்தனை கலைஞர்களும் (ஹீரோ, ஹீரோயின் உட்பட) அதன் விழாவிற்கு வர வேண்டும். இங்கு ஹீரோயின் மற்றும் கூல் சுரேஷ் போன்ற முக்கிய நபர்கள் கூட வராதது.ஒரு படத்தின் வெற்றி வாய்ப்பைக் குறைக்கும் என்று ஆதங்கப்பட்டார்.

சினிமா மீது உள்ள நேசத்தால்தான் தன்னால் 89 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை இத்துறையில் நீடிக்க முடிகிறது என்று குறிப்பிட்டார். சினிமாவில் சாதிக்க லட்சியமும், ஒழுக்கத்தோடு இருக்க வேண்டும் என்றும், ஏமாற்றுவது எளிது.ஆனால் நிலைப்பது கடினம் என்றும் கூறினார்.

படத்தின் நாயகன், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என மூன்று பொறுப்புகளையும் ஃபைசல் ராஜ் ஒரே நேரத்தில் ஏற்றதால், அவர் உடல் மெலிந்துவிட்டார் எனப் பேசினார். முதலில் ஒரு பணியில் (ஹீரோ அல்லது இயக்குனர்) மட்டும் கவனம் செலுத்தி, அதில் ஜெயித்த பிறகு அடுத்து தயாரிப்பாளர் பொறுப்பை எடுக்க வேண்டும் என ஹீரோவுக்கு ஆலோசனை கூறினார்.

புதிய திரைப்படங்கள் வெளியாகும் போது திரையரங்குகளில் வசூல் வருவதில்லை. விளம்பரம் உள்ளிட்ட அனைத்துச் செலவுகளையும் செய்து படம் திரையரங்கிற்கு வந்தாலும், சில சமயங்களில் 10 பேர் கூடப் பார்க்க வருவதில்லை. இதனால் திரையரங்கில் வாடகை, மின்சாரக் கட்டணம் கூடச் சம்பாதிக்க முடிவதில்லை.

முன்னர் ஒரு படத்துக்கு 11:30 மணி, 3 மணி, 6 மணி, 10 மணி என நான்கு காட்சிகளும் ஒரே படம் ஓடியதால், அந்தப் படம் நல்ல வரவேற்பு. ரிப்பீட் ஆடியன்ஸ் மூலம் வசூல் பார்த்தது. இப்போது சிறிய படத்துக்கு 11:30 மணி காட்சி மட்டுமே கிடைக்கிறது. இதனால் விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளருக்குப் பணம் வருவதில்லை.

இந்தச் சிக்கலைச் சமாளிக்க ஒரு புதிய திட்டத்தை கொண்டு வருகிறோம்.அது பெரிய வேலையென்றும் அதற்கான பணிகள் நடைபெற்று கொண்டு இருக்கின்றன. தமிழ்நாட்டில் உள்ள சுமார் 10,000 திருமண மண்டபங்களுடன் பேசி, திருமணங்கள் இல்லாத நாட்களில் அங்கு திரைப்படங்களைத் திரையிட ஏற்பாடு செய்திருப்பதாகக் கூறினார்.அது தொடர்பான செயல்பாடுகள் நடைபெற்று கொண்டு இருக்கின்றன.

இத்திட்டத்தின் கீழ், ஏசி உள்ள டிக்கெட்டுக்கு ₹75-ம், சாதாரண டிக்கெட்டுக்கு ₹50-ம் நிர்ணயம் செய்யப் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. மேலும், வெளியில் இருந்து ஸ்நாக்ஸ் கொண்டு வரலாம். பைக்குக்கு ₹10 கட்டணம் என்ற மாதிரியான முடிவுகளுடன் பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. இந்தத் திட்டம் வெற்றி பெற்றால், வாரத்திற்குச் சுமார் ₹3 கோடி ரூபாய் வசூல் ஈட்ட முடியும் என்கிறார். இது ஜிஎஸ்டி கட்டணங்களைப் போக தயாரிப்பாளர்களை வாழ வைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

திரைப்பட விழாக்களில் படத்துடன் தொடர்புடைய நடிகர்கள் மட்டுமே பேச வேண்டும். சம்மந்தமே இல்லாத யாரோ ஒருவரைக் கூப்பிட்டு உட்கார வைத்தால், அவர்கள் சம்பந்தமில்லாத ஊர்க் கதையையோ அல்லது அரசியலையோ பேசி மீடியாக்களின் நேரத்தை வீணடிக்கிறார்கள்.

திரைப்பட நிகழ்வுகளை ஒரு மணி நேரத்துக்கு மிகாமல் நடத்த வேண்டும். அப்போதுதான் ஊடகங்களுக்கும் அதில் ஆர்வம் இருக்கும், சினிமாவுக்கும் நல்ல கன்டென்ட் (உள்ளடக்கம்) கிடைக்கும்.

தியேட்டர்களில் உணவுப் பொருட்களை வெளியில் இருந்து கொண்டு வர அனுமதிக்க வேண்டும். மேலும் டிக்கெட் விலையும் எல்லா வகையினரும் பயன்படக்கூடிய வகையில் இருக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

இன்று திரைத்துறையில் ஏமாற்றுபவர்களே அதிகம் இருக்கிறார்கள். குறிப்பாக சங்கத்திலேயே பாதிப்பேர் ஏமாற்றுகிறார்கள். பணமே இல்லாமல் பணம் இருப்பதாகக் கூறிக்கொண்டு வந்து சேர்ந்து, பின் ஹீரோவிடம் பணம் கேட்கிறார்கள் என்று வேதனையுடன் கூறினார்.

தான் பட்ட கஷ்டங்கள் இனி யாரும் படக் கூடாது என்பதற்காகவே சங்கத்தைத் தொடங்கியதாகவும், இன்று 24 சங்கங்களைத் தொடங்கி எல்லா நிலைகளிலும் இயங்கி வருவதாகவும் குறிப்பிட்டார். படம் எடுக்க நினைக்கும் யாரும் சங்கத்தை அணுகிக் கேட்டு, தனிப்பட்ட முறையில் யாரையும் நம்பாமல் படம் எடுத்தால் நிச்சயம் ஜெயிக்கலாம் என்று அறிவுறுத்தினார்.

செல்போனில் படம் எடுக்கப்பட்டு உலகமே கையில் அடங்கிவிட்ட இன்றைய சூழலில், மக்களைத் திரையரங்கிற்கு வர வைக்க படம் சிறப்பாக இருக்க வேண்டும்.

படத்தின் ஹீரோ, இயக்குனர், தயாரிப்பாளர் என மூன்று பொறுப்பிலும் ஏதாவது ஒன்றில் மட்டும் கவனம் செலுத்தி சாதித்து வர வேண்டும். சினிமா மீது நம்பிக்கை கொண்டவர்கள் நேர்மையுடன் இருந்தால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்றும், ‘பகல் கனவு’ திரைப்படத்தை ஓடிடி மூலமாகவோ அல்லது வேறு வழியிலோ எப்படியாவது முதலீட்டை எடுக்க ஆலோசனை வழங்குவோம் என்றும் கூறி உரையை முடித்தார்.

விழாவில் நடிகை சகீலா இம்மாதிரி சிறிய அளவு நிகழ்ச்சி நடந்துவது நன்மையே என்றும்,பெரிய அரங்குகளில் நடத்தி காசை கரியாக்காமல் இருப்பது சாலச் சிறந்தது என்றும் என்னை கேரளாவில் கொண்டாடியது போல தமிழ் நாட்டில் உங்களை கொண்டாடுவார்கள் என்றும் இந்த மாதிரி தயாரிப்பாளர்களை ஏமாற்றாமல் நாம் தான் வாழ வைக்க வேண்டும் என்றும் கூறினார்.

இத்திரைப்படம் நவம்பர் 7 முதல் 70 க்கும் அதிகமான திரையரங்குகளில் தமிழ்நாடு,கேரளா மற்றும் கர்நாடகாவில் வெளியாகிறது.Seventh Studio Kannan வெளியிடுகிறார்.

#pagalkanavu #Faisalraj #Jasminefilmsinternational #seventhstudiokannan #prosivakumar #sivaprfactory #coolsuresh #shakeela #karateraja #krishnanthu #Athirasanthosh #anishraju #sureshnandhan #november7threlease