மிஷ்கின் இயக்கும் பிசாசு 2 படத்தின் First Look Poster இன்று வெளியானது!

0

 33 total views,  1 views today

மிஷ்கின் இயக்கும் பிசாசு 2 படத்தின் First Look Poster இன்று வெளியானது!

ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர் T.முருகானந்தம் தயாரிப்பில் வெற்றி இயக்குனர் மிஷ்கின் இயக்கும் படம் ‘பிசாசு 2’

தமிழ் தெலுங்கு மற்றும் தென்னிந்திய மொழிகளில் உருவாகும் இப்படத்தின் அறிவிப்பு வெளியான நாள் முதலே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘பிசாசு 2’ படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கவுரவ தோற்றத்தில் நடிக்க உடன் நடிகை பூர்ணா, சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

பிரபல இயக்குனர் வெற்றிமாறன் பிசாசு 2 படத்தின் First Look Poster இன்று தனது சமூக வலைதளம் மூலமாக வெளியிட்டார்.

இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையில் உருவாகும் இப்படத்திற்கு சிவா சாந்தகுமார் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். 

விரைவில் இப்படத்தின் First Single வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

Share.

Comments are closed.

CLOSE
CLOSE