![]()
விமர்சன ரீதியாகப் பெறும் பாராட்டு பெற்ற இப் படத்தை இந்தியாவில் உள்ள Prime மெம்பர்கள, டிசம்பர் 17 முதல் , மலையாளம், ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் மொழிகளில் Prime Video-இல் காணலாம்.
ஆசீர்வாத் சினிமாஸ் ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில் வெளிவந்துள்ள மரக்கார்: லயன் ஆப் அரபியன் சீ ( மரைக்காயர் – அரபிக்கடலின் சிங்கம்) திரைப்படத்துடன் தென்னகத்தின் பிரபல நட்சத்திரம் மோகன்லால் மற்றும் இயக்குனர் பிரியதர்ஷன் ஆகியோரின் மிகவும் வெற்றிகரமான நடிகர்-இயக்குனர் கூட்டணி உங்கள் திரைக்கு வருகிறது.
Trailer Link: https://youtu.be/AfJadYjchUg
மும்பை, இந்தியா, டிசம்பர்-13, 2021—பிரபல நடிகர் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்துள்ள இந்த ஆண்டின் மிகப்பெரிய காவிய சாகசமான மரக்கார்: லயன் ஆப் அரபியன் சீ ( மரைக்காயர் – அரபிக்கடலின் சிங்கம்) திரைப்படத்தின் பிரத்யேக ஸ்ட்ரீமிங் பிரீமியரை இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் பொழுதுபோக்கு தளங்களில் ஒன்றான Prime Video உங்கள் திரைக்கு எடுத்து வருகிறது. ஆசீர்வாத் சினிமாஸ்ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில் பிரியதர்ஷன் எழுதி இயக்கி, அர்ஜுன் சர்ஜா, சுனில் ஷெட்டி, மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ், மறைந்த நெடுமுடி வேணு மற்றும் பிரணவ் மோகன்லால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்பிரம்மாண்டமான மலையாள மொழித் திரைப்படம் இம்மாத தொடக்கத்தில் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இப்படம், இந்தியாவில் டிசம்பர் 17 ஆம் தேதி முதல் Prime Video-இல் திரையிடப்படும், மேலும் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் காணக் கிடைக்கும்.
“திரைப்படத்தைக் கண்டு ரசித்த பார்வையாளர்களின் கருத்துகளை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன், மேலும் எனது ஒவ்வொரு ரசிகர்களும் அளித்த அன்புக்கும் எனது நன்றிகள். இந்தியாவின் முதல் கடற்படைத் தளபதி என்று அழைக்கப்படும் குஞ்சாலி மரக்கரின் பிரபலக் கதையை உயிர்ப்பிக்கும் இப்படத்தின் நான் ஒரு பகுதியாக இருப்பது பெருமைக்குரியது, ”என்று பிரபல நடிகர் மோகன்லால் கூறினார். அவர் மேலும் கூறுகையில் “இது ஒவ்வொரு இந்தியனின் இதயங்களையும் உணர்ச்சிகளையும் தொடும் கதை என்று நான் நம்புகிறேன். இக்கதையை அசாதாரணமான அளவில் உயிர்ப்பிக்க முடிந்தது ஏன் கனவு நனவானதை உறுதி செய்தது. Prime Video-இல் மரக்கார் டிஜிட்டல் பிரீமியராகக் காட்சிப்படுத்தப்படுவதை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், இது நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே தங்கள் குடும்பத்தினருடன் இணைந்து இத்திரைப்படத்தைக் கண்டு ரசிக்கும் வாய்ப்பை வழங்கும்.” என்றார்.
Amazon Prime Video, இந்தியாவின் கன்டென்ட் லைசன்சிங் துறையின் தலைவர் மணீஷ் மெங்கானி கூறியதாவது: “விருது வென்ற பிரம்மாண்டமான திரைப்படம் மரக்கார்: லயன் ஆப் அரபியன் சீ ( மரைக்காயர் -அரபிக் கடலின் சிங்கம்) திரைப்படத்தின் ஸ்ட்ரீமிங் பிரீமியரை Prime Video-இல் வழங்குவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். ஆசீர்வாத் சினிமாஸ் உடன் மீண்டும் ஒருமுறை இணைந்து செயலாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் மற்றும் மோகன்லால் மற்றும் பிரியதர்ஷன் ஆகியோரின் வெற்றிகரமான நடிகர்-இயக்குனர் கலவையில் அற்புதமான நடிகர்கள் மற்றும் குழுவினரால் வலுப்படுத்தப்பட்ட இத்திரைப்படத்தை எங்கள் பார்வையாளர்களுக்கு கொண்டு வருகிறோம். வாடிக்கையாளருக்கு முன்னுரிமை எனும் அணுகுமுறையை தொடர்ந்து கடைப்பிடிப்பதில் PrimeVideo பெருமிதம் கொள்கிறது, மேலும் இந்த ஆண்டை மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த மெகா என்டர்டெய்னருடன் நிறைவு செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
டிரெய்லர் இணைப்புகள்:
மரக்கார் அரபிக்கடலின்ட சிம்ஹம் (மலையாளம்):
மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் (தமிழ்):
மரக்கார் அரப் சாகர் கா ஷேர் (இந்தி):
மரக்கார் அரேபிய சமுத்திர சிம்மம் (தெலுங்கு):
கதை சுருக்கம்: மரக்கார்: லயன் ஆப் அரபியன் சீ ( மரைக்காயர் -அரபிக் கடலின் சிங்கம்) , இந்தியாவின் தலைசிறந்த கடற்படைத் தலைவர்களில் ஒருவராகக் கருதப்படும் நிஜ வாழ்க்கைக் கதாபாத்திரத்தின் வாழ்க்கை வரலாறு ஆகும். 15-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் காட்சிப்படுத்தப்படுள்ள இந்தத் திரைப்படம், மலபார் கடற்கரையின் அச்சமற்ற கடற்தளபதியாகவும் பின்னர் கோழிக்கோட்டை ஆண்ட ஜாமோரின் (சாமூத்திரி)-இன் கடற்படைத் தளபதியாகவும் இருந்த குஞ்சாலி மரக்கார், , போர்த்துகீசியர்கள் ஒரு கடற்படை போரில் தோற்கடித்த கதையைக் கூறுகிறது. கதை குஞ்சாலி மரைக்காயர் 4 (முகமது அலி) -ஐ மையமாகக் கொண்ட இந்தத் திரைப்படம் பல்வேறு நாவல்கள் மற்றும் குஞ்சாலி மரைக்காயர் பற்றி எழுதப்பட்ட நூல்களிலிருந்து தழுவி எடுக்கப்பட்டது மற்றும் இது ஒரு ஆடம்பரமாகஉருவாக்கப்பட்ட சரித்திர நாடகமாகும்.
Prime Video கேடலாகில் உள்ள ஆயிரக்கணக்கான ஹாலிவுட் மற்றும் பாலிவுட், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களுடன் மரக்கார்: லயன் ஆப் அரபியன் சீ ( மரைக்காயர் -அரபிக் கடலின் சிங்கம்) திரைப்படமும் இணைகிறது. மும்பை டைரிஸ். தி பேமிலி மேன்,காமிக்ஸ்தான் சேம காமெடி பா, ப்ரீத்: இன்டூ தி ஷேடோஸ், பாண்டிஷ் பண்டிட்ஸ், பாதாள்லோக், தாண்டவ், மிர்சாபூர் சீசன் 1&2, தி ஃபார்காட்டன் ஆர்மி – ஆசாதி கேலியே, சன்ஸ் ஆப் சாயில் – ஜெய்பூர் பிங்க் பேந்தர்ஸ், ஃபோர் மோர் ஷாட்ஸ் பிளீஸ், மேட் இன் ஹெவன் மற்றும் இன்சைட் எட்ஜ் போன்ற இந்தியாவில் தயாரிக்கப்பட்ட Amazon Original series தொடர்கள் மற்றும் இந்தியத் திரைப்படங்களான கூலி நம்பர் 1, குலாபோ சிதாபோ, துர்காமதி, சலாங், சகுந்தலா தேவி, ஜெய் பீம், பொன்மகள் வந்தாள், ஃபிரெஞ்ச் பிரியாணி, லா, சுஃபியூம் சுஜாதயும், பென்குயின், நிசப்தம், மாரா, வி, சி.யூ சூன்,சூரரைப் போற்று, பீமாசேன நல மகாராஜா, திருஷ்யம்-2, ஹலால் லவ் ஸ்டோரி, மிடில் கிளாஸ் மெலடீஸ், பித்தம் புதுக் காலை மற்றும் அன்பாஸ்ட் உடன் Amazon Originals-இன் சர்வதேச திரைப்படமான போராட் சப்சிகியுவன்ட் மூவி பிலிம், தி வீல் ஆப் டைம், டாம் க்ளான்சியின் ஜாக் ரியான், தி பாய்ஸ், ஹண்டர்ஸ், ஃப்ளீபேக் மற்றும் தி மார்வெலஸ் மிசஸ் மைசெல் போன்றவையும் Prime உறுப்பினர்களுக்கு கூடுதல் செலவின்றிக் கிடைக்கிறது. இந்தச் சேவையில் இந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி மற்றும் பெங்காலி மொழிகளில் பல திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் உள்ளன.

