![]()
கொலையில் முடிந்த
பேஸ்புக் காதல்!
“ரகசிய சினேகிதனே”
சென்னையில் கணவன் சந்தோஷ் உடன் வசிக்கும் சந்தியாவுக்கு பேஸ்புக்கில் பாண்டிச்சேரியில் மனைவியுடன் வசிக்கும் பல் டாக்டர் பரமேஷ் நட்பு கிடைக்கிறது. இருவரும் வாட்ஸ்ஆப்பில் மணிக்கணக்கில் சாட் செய்து, பொழுதை கழிக்கின்றனர். இவர்களது சாட் ஒரு வருடம் கழித்து சந்தோஷ்க்கு தெரியவர, சந்தியாவை கண்டிக்கிறான். அவனிடம் சாட் செய்வதில்லை என்று பொய் சொல்லி, அவனுக்கு தெரியாது என்று நினைத்து கொண்டு, அவன் வேலைக்கு சென்றதும் பரமேஷ் உடன் சாட்டிங்கை தொடர்கிறார் சந்தியா. அதை கண்டு பிடித்து சந்தோஷ் அடித்து கண்டிக்க, ஒரு நாள் திடீரென்று மர்மமான முறையில் சந்தியா இறந்து போகிறாள். போலீஸ் சந்தோஷை அடித்து விசாரிக்க, இறுதியில் சந்தியாவை யார் எதற்காக கொன்றார்கள் என்ற விளக்கத்துடன் படம் நிறைவடைகிறது.
வேல்முருகன், ஸ்வேதா ஸ்ரீம்டன், குரு பிரகாஷ், பாக்கியராஜ், பிரதீபா, பிரசாந்தினி, நிஷா, கந்தவேலு ஆகியோர் நடித்துள்ளனர்.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் சேகர் கன்னியப்பன். தயாரிப்பு லதா சேகர். இணை இயக்கம் கே.பாக்யராஜ் செல்வகுமார், ஒளிப்பதிவு ஷாம்ராஜ், இசை டாக்டர் சுரேஷ், எஸ்.சுப்பிரமண்யா, எடிட்டிங் டி.நாகராஜ் க.உதயமூர்த்தி, கலை கதிரேசன், மக்கள் தொடர்பு கோவிந்தராஜ். புனிக புரொடக்ஷன்ஸ் சார்பில் லதா சேகர் தயாரித்துள்ளார்!
பிரண்ட்ஸ் பிக்சர்ஸ் என்.பி.இஸ்மாயில் தமிழகம் முழுவதும் டிசம்பர் 26’ம் தேதி வெளியிடுகிறார் ரகசிய “சினேகிதனே”!
_GovindarajPro


