Tuesday, April 22

பிரபுதேவா நடிக்கும் ‘ரேக்ளா’ படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!

Loading

ஒலிம்பியா மூவிஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். அம்பேத் குமார் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கும் திரைப்படம் ‘ரேக்ளா’. ‘நடனப்புயல்’ பிரபுதேவா கதையின் நாயகனாக நடிக்கும் இந்த படத்தை, ‘வால்டர்’ பட இயக்குநர் அன்பு இயக்குகிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார்.

பிரபுதேவாவின் நடிப்பில் 58-வது படமாக உருவாகும் ‘ரேக்ளா’ படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இவ்விழாவில் தயாரிப்பாளர்கள் ‘ஃபைவ் ஸ்டார்’ கதிரேசன், சி. வி. குமார், ராக்ஃபோர்ட் முருகானந்தம், இயக்குநர்கள் மனோஜ், தாஸ் ராமசாமி மற்றும் கோபி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து ‘ரேக்ளா’ படத்தின் படப்பிடிப்பை இயக்குநர் மிஷ்கின் கிளாப் அடித்து தொடங்கிவைத்தார்.