![]()

‘ காந்தாரா ‘ படத்தின் மூலம் பரபரப்பாக தமிழ் ரசிகர்களுக்கும் தெரிந்த நடிகர்- டைரக்டர் ஆகிவிட்டார், ரிஷப் ஷெட்டி. கன்னடத்தில் பல படங்களில் நடித்தும், சில படங்களை இயக்கியும் இருக்கிறார், இவர். 39 வயதான ரிஷப் ஷெட்டி எம்.பி.ஏ படித்தவர். ஃபிலிம் டைரக்ஷ்னில் டிப்ளமோ வாங்கி இருக்கிறார்.
2012-ல் சிறிய வேடத்தில் ‘துக்ளக்’ படத்தில் நடித்து, நடிகராக அறிமுகம் ஆனார். ‘ யக்ஷ்சகானா ‘ என்ற கர்நாடக , Traditional dance folk-ல் நன்கு பயிற்சி பெற்றவர். இவர் நடித்து 2019-ல் வெளிவந்த ‘ பெல் பாட்டம் ‘ படம் சூப்பர் ஹிட். 2016-லிருந்து டைரக்ஷ்ன் செய்து வருகிறார்.
ரிஷப் ஷெட்டியின் உண்மை பெயர் பிரஷாந்த் ஷெட்டி. இவருடைய தந்தை பாஸ்கர் ஷெட்டி ஒரு புகழ் பெற்ற ஜோசியர். அவர்தான் ரிஷப் ஷெட்டி என்று பெயர் மாற்றம் செய்தார். அதிலிருந்து அதிர்ஷ்டம் அடித்தது ரிஷப் ஷெட்டிக்கு.
இவருக்கு திருமணம் ஆகி 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இவருக்கு பிடித்த நடிகை திவ்யா ஸ்பந்தனாவாம். நம்ம தமிழ் படங்களில் நடித்த ‘ குத்து ‘ரம்யாதான் அவர். இவருடைய மனைவி பிரகதிக்கு முதல் பரிசாக கம்மல் அளித்திருக்கிறார். கணவருக்கு பிரகதி அளித்த முதல் பரிசு என்ன தெரியுமா OLD MONK RUM…..




