ராகவா லாரன்ஸி்ற்கு நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் பாராட்டு!

0

 371 total views,  2 views today

ராகவா லாரன்ஸி்ற்கு நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் பாராட்டு. படி படியா கொடுக்க வேண்டாம் ஒரு பிடியா கூட கொடுக்கலாம்.

“சமூகத்தில் ஒரு நடிகரின் பங்களிப்பு என்பது மக்களை மகிழ்விப்பது மட்டுமல்ல. மக்கள் துன்புறும் வேலை யில் அவர்களுக்கு தங்களால் ஆன உதவிகளைச் செய்ய வேண்டும் என்பதும் தான். இந்தக் கொடிய கொரோனா எனும் நோய் மக்களைத் துன்புறுத்தி வருகிறது. இந்நிலையில் அவர்களுக்கு உதவ அரசின் நிவாரண நிதிக்கு பல நடிகர்கள் நிதியளித்துள்ளார்கள். நடிகர் லாரன்ஸ் பிரதமர் நிவாரணம் முதல்வர் நிவாரணம் உள்ளிட்ட சினிமாத்துறையில் உள்ள பல்வேறு அமைப்புகளுக்கும் சேர்த்து மூன்று கோடி வழங்கினார்.

அது தவிர்த்து மேலும் மக்களுக்கு நேரடியாகவும் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார்.

கொரோனா நோய் பரவலைத் தடுக்க நமது அரசு ஊரடங்கு அறிவித்த நாளில் இருந்து எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களின் பசி தீர்க்கும் விதமாக தற்போது நடிகர் லாரன்ஸ் ‘தாய்’ என்ற குழு ஒன்றைத் துவங்கி அதன் மூலமாக திரைத்துறையில் உள்ள அவரது நண்பர்களுக்கும் உதவி கோரிக்கையை விடுத்துள்ளார். அவரது அன்பு கோரிக்கையை ஏற்று நடிகர் ரஜினிகாந்த் 1000 கிலோ அரிசியை அனுப்பி வைத்தார். அதைத் தொடர்ந்து நேற்று நடிகர் பார்த்திபன் லாரன்ஸின் தாயாருக்கு வீடியோவில் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியதோடு 1000 கிலோ அரிசியையும் வழங்கியுள்ளார். மேலும் அந்த வீடியோவில் பார்த்திபன் கூறும்போது, “சினிமாவிம் சம்பாதித்த பணத்தை முக்கால் வாசிக்கும் மேல் மக்களுக்கு நல்லது செய்ய செலவழித்து வருகிறார் லாரன்ஸ். அவருக்கு நண்பராக இருப்பதில் பெருமைப்படுகிறேன். ஒருவரால் மட்டும் எல்லாருக்கும் செய்ய முடியாது. அதனால் நம் அனைவரும் ஒன்றிணைந்து உதவுவோம்” என்றார்

இதுகுறித்து நடிகர் லாரன்ஸ்,

எனது தாயின் பிறந்தநாளுக்கு வாழ்த்துகளைக் கூறிய பார்த்திபன் சாருக்கு எனது பெரிய நன்றி. உங்கள் வீடியோவைப் பார்த்து நாங்கள் அனைவரும் அதிக சந்தோசமாக இருக்கிறோம். எனது கோரிக்கையை உடனடியாக ஏற்றுக்கொண்டு, கொரோனா நிவாரணத்திற்காக 1000 கிலோ அரிசியை நன்கொடையாக வழங்கியதற்கும் நன்றி.

உங்களின் பங்களிப்பை எங்கள் தாய் என்ற குழு பசியால் பாதிக்கப்பட்டுள்ள சரியான மக்களுக்கு விநியோகிக்கும், மேலும் விவரங்களை விரைவில் உங்களுக்கு தெரிவிப்போம். உங்களுக்கு பெரிய இதயம் இருக்கிறது, மேலும் பல இடங்களிலும் நீங்கள் உதவி செய்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். உங்கள் நண்பராக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன்” என்றார். மேலும்
இந்த வீடியோவைப் பார்த்த பிறகு யாராவது பார்த்திபன் சார் போல முன்வந்து உதவி செய்ய விரும்பினால் தொடர்பு கொள்ளவும்: 877-8338209. ஒருகிலோ அரிசி கூட ஒருசிலரின் பசியை நிரப்பும்” என்றும் லாரன்ஸ் கூறியுள்ளார்.

 

Share.

Comments are closed.