![]()
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தொலைதூர கல்வி பயில எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் பாட திட்டங்கள் ஆன்லைன் மூலம் கற்பிக்கப்படும். எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி பல்கலைக்கழக மானியக் குழுவினால் சென்ற ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் தொடக்கமாக இந்த கல்வி ஆண்டில் ஐந்து பாடத் பிரிவுகள் செயல்பாட்டிற்கு வருகின்றன. இளநிலை மேலாண்மை , வணிகவியல் , இளநிலை ஊடகவியல் ( Journalism) , இளநிலை ஆங்கிலம் மற்றும் முதுநிலை ஆங்கிலம் ஆகிய பிரிவுகள் வழங்கப்படுகின்றன.
இந்த ஆண்டிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன விண்ணப்பங்கள் பெற கடைசி நாள் 28/02/19 . எஸ்.ஆர்.எம் இன் தொலைதூர கல்வி மையங்கள் எஸ்.ஆர்.எம் இராமாபுரம் , வடபழனி மற்றும் திருச்சி வளாகங்களில் இயங்கும். இந்திய அளவில் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவின் மூலம் முதல் தர அங்கீகாரம் பெற்ற வரிசையில் இடம் பெற்ற பல்கலைக்கழகங்களுள் எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த கல்வி ஆண்டு முதல் யோகா , நுண்கலை மற்றும் முதுநிலை மேலாண்மை ஆகிய பிரிவுகளும் இடம்பெற உள்ளன.
தொடர்புக்கு
தொலைதூர கல்வி இயக்ககம்
எஸ்.ஆர்.எம் மாணவர் சேர்க்கை
+91 44 2741 7040/2745 5510
director.dde@srmuniv.ac.in
admissions.india@srmuniv.ac.in
