மலேசியாவில் வருகிற 28.09 .2019 தேதியில் சின்னத்திரை நட்சத்திரக் கலைஞர்களின் மாபெரும் கலை விழா நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை சின்னத்திரை நடிகர் சங்கக்தலைவர் A. ரவிவர்மா தலைமையிலான குழுவினர் மும்முரமாக ஈடுபட்டுச் செய்து வருகின்றனர்.
இவ் விழாவுக்கான அழைப்பிதழைப் பெற்றுக் கொண்ட தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் ,
தனது வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுச் சங்கத்துக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
மாண்புமிகு முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
சின்னத்திரை நட்சத்திரங்களின் கலை விழா மலேசியாவில் 28.09.20 19 அன்று நடைபெறுவது அறிந்து நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இந்த விழாவில் நான் பங்கேற்க விரும்பிய போதிலும் முக்கிய அலுவல் காரணமாக என்னால் கலந்து கொள்ள இயலவில்லை.
இந்த இனிய விழாவில் பங்கேற்கவுள்ள அனைத்து சின்னத்திரை நட்சத்திரங்களுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பாக என் இதயபூர்வமான நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன் .
சின்னத்திரை நட்சத்திரங்களின் கலைவிழா சங்கத்தின் வளர்ச்சிக்காகவும் சங்க உறுப்பினர்களின் குடும்ப நலனுக்காகவும் நடைபெறுவது மிகவும் பாராட்டுக்குரியது.
சின்னத்திரை நட்சத்திரங்களின் கலை விழா நிகழ்வுகள் சிறப்புடன் நடைபெற அயராது உழைத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியிருக்கிறார்.
இந்தக் கலைவிழாவில் பெரிய திரையான திரைப்படத்துறை சார்ந்த கலைஞர்களும் தங்கள் ஆதரவும் பங்களிப்பும் இருக்கும் என்று நம்பிக்கை கொடுத்துள்ளனர். எனவே
அவர்களின் வரவையும் சின்னத்திரைக் கலைஞர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.