செத்தும் கொடுத்த சீதக்காதிக்கு ஒரு சிலை…

0

 223 total views,  1 views today

லண்டனில் உள்ள மேடம் டுடாட் மெழுகு அருங்காட்சியகம் உலகப் புகழ் பெற்றது. இந்தியாவில் கோவா, டெல்லி கன்னியாகுமாரி என்று பல இடங்களிலும் தனியார் நடத்தும் குட்டி மெழுகுச் சிலை அருங்காட்சியகங்கள் இருக்கின்றன.

தமிழ்த் திரையுலகில் முதல் முறையாக ஒரு பட விளம்பரத்துக்காக மெழுகுச் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது.

கற்பனையாக சித்திரிக்கப்பட்ட கதாபாத்திரத்துக்கு மெழுகுச் சிலை வடிவமைத்து, பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைப்பது இதுவே முதன்முறை.

பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் சீதக்காதி படத்துக்காக விஜய் சேதுபதியின் மெழுகுச் சிலையை உருவாக்கி, எக்ஸ்பிரஸ் அவின்யூவில் பார்வைக்கு வைத்திருக்கிறது படக்குழு.

இந்த சிலையுடன் நின்று செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடும் ரசிகர்களில் 25 பேரை தேர்ந்தெடுத்து சீதக்காதி படத்தின் பிரிமியர் காட்சியில் படம் பார்க்க ஏற்பாடு செய்திருப்பதாகவும் அறிவித்திருக்கிறார்கள்.

சீதக்காதி படத்தில் படத்தில் நடித்திருக்கும் இயக்குநர் மகேந்திரன் இந்த சிலையை திறந்து வைத்ததுதான் தாமதம், விழாவுக்கு வந்த ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டு வந்து, வரிசையில் நின்று செல்பி எடுத்ததைப் பார்த்தால் சீதக்காதி படத்தில் விஜய் சேதுபதி நடித்த ஐயா வேடம் என்றென்றும் ரசிகர்கள் மனதில் பதிய வைத்துவிடுவார் இயக்குநர் தரணிதரன் எனத் தோன்றுகிறது.

Share.

Comments are closed.