![]()

அட்டகாசமாக ஆரம்பித்த எம் டிவியின் ஸ்ப்ளிட்ஸ்வில்லா எக்ஸ் 5: எக்ஸ்க்யூஸ் மீ ப்ளீஸ்! இதுவரை என்ன ஸ்பெஷல் தெரியுமா?
எபிசோடு 1 முதல் 6 வரை ஒரு சின்ன ரீகேப்:
வெளிநாடுகளில் மட்டும் தான் இளைஞர்களை கவரும் அட்டகாசமான டேட்டிங் ஷோவெல்லாம் இருக்குமா?.. நம்ம ஊரிலும் இளம் ரசிகர்களை சுண்டி இழுக்கக்கூடிய சூடான ரியாலிட்டி ஷோவான ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரைட்டான எம்டிவியின் ஸ்ப்ளிட்ஸ்வில்லா எக்ஸ்: எக்ஸ்க்யூஸ் மீ ப்ளீஸ் ரியாலிட்டி ஷோவின் 5வது சீசன் புதிதாக தொடங்கி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
’தில் அவுர் ஃபேம்’ எனும் வெற்றிக்கனியை தட்டிப் பறிக்க 21 கவர்ச்சியான இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்றுள்ள ரியாலிட்டி ஷோவை இந்திய ரசிகர்களின் இதய ராணி சன்னி லியோனும் இதய ராஜா தனுஜ் விர்வானியும் இணைந்து தொகுத்து வழங்கி வருகின்றனர்.
இதுவரை இல்லாத அளவுக்கு முதல் முறையாக தொலைக்காட்சி மற்றும் ஓடிடியில் ஒரே நேரத்தில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி ஏகப்பட்ட ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது. ஓடிடி ரசிகர்கள் ஜியோ டிவியில் இந்த ஸ்ப்ளிட்ஸ்வில்லா எக்ஸ் 5: எக்ஸ்க்யூஸ் மீ ப்ளீஸ் நிகழ்ச்சியை இந்த முறை தமிழ் மொழியிலும் கண்டு ரசிக்க முடியும்.
தினுசு தினுசாக கவர்ச்சி உடைகளை கலக்கலாக அணிந்து கொண்டு ரசிகர்களை சுண்டி இழுக்கக் கூடிய உர்ஃபி ஜாவேத் இந்த சீசனிலும் ரசிகர்களை உற்சாகப்படுத்த களமிறங்கி உள்ளார். மேலும், எக்ஸ் ஸ்ப்ளிட்ஸ்வில்லா போட்டியாளர்களுடன் அவர் அடிக்கப் போகும் லூட்டியை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். குறும்புக்காரியான உர்ஃபி ஜாவேத்தின் என்ட்ரியே இந்த சீசனில் அதிரடியாக இடம்பெற்றிருந்தது. தனது ஆரம்ப ஆட்டத்தையே தந்திரமாக விளையாடி இஷிதாவின் என்ட்ரியை கலகலப்பாக்கி விட்டார் உர்ஃபி ஜாவேத்.

தந்திரமான விளையாட்டின் மூலம் ஒவ்வொரு போட்டியாளர்களும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றனர். திக்விஜய் மற்றும் உனாட்டியின் தொடர்பு உள்ளிட்டவை பொறாமையை உருவாக்கி நிகழ்ச்சியின் டென்ஷனையும் இஷ்டத்துக்கு எகிற வைத்திருக்கிறது.
இந்த வில்லாவில் மலரும் புதிய காதல்களும், சிலருக்கு ஏற்படும் சங்கடங்களும், பொறாமை, கோபம் உள்ளிட்ட மனித உணர்ச்சிகள் கிளர்ந்து எழுந்து வரும் நிலையில், நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்களுக்கு அறுசுவையான உணவை பரிமாறும் உணர்வை கொடுக்கிறது. ஒருவருடன் ஒருவர் நெருங்கி பழகி காதலை வளர்ப்பது, பின்னர் பிரேக்கப் ஆகி பிரிவது, இன்னொருவருடன் உறவை வளர்ப்பது என ஏகப்பட்ட சுவாரஸ்யங்களுடன் இதுவரை இந்த ஸ்ப்ளிட்ஸ்வில்லா சீசன் 5 களைகட்டி வருகிறது.
த்ரில்லர் படம் போல பல திருப்பங்களுடன் ரோலர் கோஸ்டர் ரைடு போல இந்த ஸ்ப்ளிட்ஸ்வில்லா எக்ஸ் 5: எக்ஸ்க்யூஸ் மீ ப்ளீஸ் சென்றுக் கொண்டிருக்கிறது. காதல், பாசம், பிரிவு, மோதல் என மனிதர்களின் உறவுகள் மேம்பட்டு தெரியும் இந்த ரியாலிட்டி ஷோவை சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7 மணிக்கு எம் டிவி மற்றும் ஜியோ டிவியில் பார்த்து மகிழுங்கள்.
எம் டிவி பற்றி:
உலகளவில் இளைஞர்களுக்கான படைப்புகளை மட்டுமே அதிகளவில் கொடுத்து பல கோடி ரசிகர்களை கவர்ந்துள்ள எம் டிவி இசை மற்றும் பாப் கலாசாரத்தை அதிகம் வளர்த்து வருகிறது. ஜென் ஸி (Gen Z) இளைஞர்கள் மத்தியில் அதிகம் ஈர்ப்பை ஏற்படுத்தியிருக்கும் எம் டிவி அவர்களின் இசை மற்றும் பாப் கலாசாரம் வளரவும் பேருதவி செய்து வருகிறது. கிட்டத்தட்ட 50 மில்லியன் இளைஞர்கள் பல தரப்பட்ட பிளாட்ஃபாரம் மூலமாக எம் டிவியின் படைப்புகளை கண்டு ரசித்து வருகின்றனர். தொடர்ந்து அவர்களின் ரசனைக்கேற்ற படைப்புகளையும் எம் டிவி தரமாகவும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் போராடிக்காமல் கொடுத்து வருகிறது.
எம் டிவியின் முக்கிய நிகழ்ச்சிகளாக ரோடீஸ், ஸ்பிளிட்ஸ்வில்லா, ஹஸல், அன்பிளக்ட், சூப்பர் மாடல் ஆஃப் தி இயர் மற்றும் கப்புள் ஆஃப் நியூ ஏஜ் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ரசிகர்களை அதிகம் கவர்ந்த நிகழ்ச்சிகளாகவும் எப்போதும் அவர்கள் விரும்பி பார்க்கும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த நிகழ்ச்சியாகவும் உள்ளன.
இதுமட்டுமின்றி புதிய கிரியேட்டிவான விஷயங்களையும் எம் டிவி செய்து வருகிறது. எம் டிவி மெமரி கரோக்கி, எம் டிவி கேன்சல் கோவிட், எம் டிவி டிராஷ் டாக், எம் டிவி பார் பிரா தேக்கோ என ஏகப்பட்ட இன்னோவேட்டிவ் நிகழ்ச்சிகளும் இடம்பெற்றுள்ளன. இளைஞர்கள் மத்தியில் எப்போதும் பாசிட்டிவான எண்ணங்களை விதைக்கும் வகையில் பல முயற்சிகளை எம் டிவி எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
விளம்பரதாரர்களை பொறுத்தவரையிலும் பல முன்னணி பிரபல பிராண்டுகளுடன் தான் கைகோர்த்து இருக்கிறது. ஹுண்டாய், எச்பி, ஏர் பிஎன்பி, நெஸ்கஃபே, லிங்கட் இன் மற்றும் பல முன்னணி நிறுவனங்களுடன் கைகோர்த்துள்ளது. சமீபத்தில் எம் டிவி ரோடீஸ் நொய்டா கேஃபே ரோடீஸ் , ஜெய்ப்பூர் கிளப் ரோடீஸ், சண்டிகரில் ரோடீஸ் காபிஹவுஸ் மற்றும் ரோடீஸ் கிளப் என பல கிளைகளை தொடங்கியிருக்கிறது. மேலும், எம் டிவி குறித்த விபரங்களுக்கு, எம் டிவியின் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியை தொடர்பு கொள்ளவும். https://www.mtvindia.com/
வயகாம் 18 மீடியா லிமிடெட் பற்றி:
இந்தியாவின் முன்னணி மீடியா நிறுவனமாக விளங்கி வரும் வயகாம் 18 மீடியா லிமிடட் நிறுவனம் அதிவேக வளர்ச்சியுடன் நாளுக்கு நாள் தனது தளத்தை உயர்த்திக் கொண்டே வருகிறது. பல தரப்பட்ட மக்கள் பார்த்து மகிழக் கூடிய பல தரப்பட்ட நிகழ்ச்சிகளை தரமாகவும் துல்லியமாகவும் அனைத்து அம்சங்களுடன் வழங்கி வருகிறது. ஆன் ஏர், ஆன்லைன், ஆன் கிரவுண்ட் என பல தரப்பட்ட தொடர்புகள் மூலமாக மக்களின் வாழ்வில் இரண்டற கலந்து வருகிறது. பொழுதுபோக்கு, திரைப்படங்கள், விளையாட்டு, இளைஞர்களை கவரும் நிகழ்ச்சிகள், இசை, குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் என அனைத்து விதமான நிகழ்ச்சிகளையும் சுமார் 38 சேனல்கள் மூலமாக வழங்கி வருகிறது. ஜியோ சினிமா மற்றும் வயகாம் ஓடிடி தளம் விளையாட்டு நிகழ்ச்சிகளை கண்டு ரசிக்கும் நம்பர் ஒன் ஓடிடி தளமாக இந்தியாவிலேயே இருப்பது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமின்றி இந்தி மற்றும் பிராந்திய மொழி படங்களை வயகாம் 18 ஸ்டூடியோ கடந்த 15 ஆண்டுகளாக தயாரித்து வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது.
