Friday, April 17

கவனம் கவரும் திகில் முயற்சியாக மலரும் ‘சூனியம்’!

Loading

இரட்டை முகத்தில் மர்ம மிரட்டல்!

ஜே.டி. சக்கரவர்த்தியின் ‘சூனியம்’ கவனம் கவரும் திகில் முயற்சி!

சூனியம், கருமம், மர்ம நம்பிக்கைகள் போன்ற அடிப்படையில் உருவாகும் திகில்–மர்ம திரைப்படமாக ‘சூனியம்’ உருவாகி வருகிறது. உண்மை சம்பவங்களின் தாக்கத்துடன் உருவாகும் இந்த படம், ஆரம்ப கட்டத்திலேயே ரசிகர்களின் ஆர்வத்தை கிளப்பியுள்ளது.

பல பரிமாணங்களில் தன்னை நிரூபித்துள்ள நடிகர் ஜே.டி. சக்கரவர்த்தி, இந்த படத்தில் இதுவரை இல்லாத புதிய அவதாரத்தில் தோன்றுகிறார். ஹீரோவும் வில்லனுமாக இரட்டை கதாபாத்திரத்தில் அவர் நடிப்பது இந்த படத்தின் முக்கிய பலமாகும். இந்த ‘டுவல் ரோல்’ அணுகுமுறை, கதைக்கு கூடுதல் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்துகிறது.

M3 மீடியா மற்றும் மஹா மூவீஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை சூர்யாஸ் இயக்குகிறார். மகர்ஷி கொண்ட்லா வழங்கும் இப்படத்திற்கு மகேந்திர நாத் கொண்ட்லா தயாரிப்பாளராக உள்ளார். இசையமைப்பாளராக அச்சு ராஜாமணி பணியாற்ற, ஆஸ்கர் விருது பெற்ற சந்திரபோஸ் பாடல் வரிகளை எழுதுகிறார்.

தொழில்நுட்ப அணியிலும் வலுவான பெயர்கள் இணைந்துள்ளன. மிர்லான் நசீர் ஒளிப்பதிவை கவனிக்க, வம்சி எடிட்டிங் செய்கிறார். இதனால், காட்சியமைப்பும் கதை சொல்லும் விதமும் தரமான அனுபவத்தை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னும் படப்பிடிப்பு தொடங்காத நிலையில் கூட, ‘சூனியம்’ வணிக ரீதியாக கவனம் பெற்றுள்ளது. குறிப்பாக, ஐந்து மொழிகளுக்கான ஆடியோ உரிமைகளை சரிகம நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அதோடு, ஒரே காட்சிக்கு பல மொழிகளில் தனித்தனி பாடல்கள் உருவாக்கப்படும் என்ற புதிய முயற்சியும் இந்த படத்தில் இடம்பெறுகிறது.

சமீபத்தில் வெளியான ப்ரீ-லுக் போஸ்டர் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை தூண்டிய நிலையில், அடுத்த மாதம் தொடங்க உள்ள படப்பிடிப்புடன் ‘சூனியம்’ திரைப்படம் மேலும் பேசப்படும் ஒன்றாக மாறும் என்பதில் ஐயமில்லை.