“நான் கதை நாயகன்தான் கதாநாயகனல்ல” – நடிகர் அப்புக்குட்டி!
தமிழ் சினிமாவில் கதாநாயகர்கள் மத்தியில் கதை நாயகனாக தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பெற்றிருப்பவர் நடிகர் அப்புக்குட்டி. சிறந்த நடிகராக தேசிய விருது பெற்றவர் மட்டுமல்ல வித்தியாசமான பாத்திரங்களுக்கும் விதிவிலக்கான பாத்திரங்களுக்கும் தன்னை ஒப்படைப்பவர் என்று பெயர் பெற்றவர் .
தனக்கென ஒரு தனி நாற்காலி தயாரித்துக்கொண்டு தமிழ் சினிமாவில் பயணிக்கும் அவர் கையில் இப்போதும் 8 படங்கள். அவரிடம் பேசியபோது கேட்டோம்,
தேசிய விருது பெற்று இருக்கிறீர்கள் இருந்தாலும் உங்களுக்கான சரியான அங்கீகாரம் கிடைத்திருப்பதாக உணர்கிறீர்களா ?
"என்னைப் பொறுத்தவரை இல்லாத வாய்ப்புகளையும் கிடைக்காத உயரங்களையும் நினைத்து வருத்தப் படுவதைவிட கிடைப்பதில் சிறப்பாக செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணம் .
எனக்கு இப்போது வாய்ப்புகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன .நான் நடித்து 'வாழ்க விவசாயி',' குஸ்கா' படங்கள் வெளிவர தயாராக ...
