Friday, October 23

Tag: இயக்குனர் மதுமிதா

விருதுகளை வென்ற “கேடி” திரைப்படம் வெள்ளித் திரைக்கு வருகிறது!

விருதுகளை வென்ற “கேடி” திரைப்படம் வெள்ளித் திரைக்கு வருகிறது!

News
சரிகமா குழுமத்தின் திரைப்படத் தயாரிப்பு பிரிவான யூட்லீ பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் மதுமிதா இயக்கத்தில், மு. ராமசாமி, நாக் விஷால்(அறிமுகம்), யோக் ஜபி நடிப்பில் உருவாகியுள்ள ‘கே.டி’ என்கிற ‘கருப்பு துரை’ திரைப்படம், வருகின்ற நவம்பர் மாதம் திரைக்கு வரவிருக்கிறது. ‘வல்லமை தாராயோ’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான மதுமிதா, ‘கொலகொலயா முந்திரிக்கா’, மூணே மூணு வார்த்தை’ ஆகிய வெற்றி படங்களை தொடர்ந்து, அவர் இயக்கியிருக்கும் ‘கே டி’. இப்படம் சர்வதேச அளவில் ஒரு தமிழ் படத்தை நோக்கி உலகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. சமுதாயத்தில் இன்றளவும் நடைமுறையில் இருந்துவரும் ‘தலைக்கூத்தல்’ எனும் ஒரு பழமையான சடங்கு, ஒருவரின் வாழ்வில் ஏற்படுத்தும் தீவிரமான தாக்கத்தை, யதார்த்தம் குறையாமல், புதுமையான முறையில் மிகவும் உணர்வுபூர்வமாகப் படமாக்கியிருக்கிறார் இயக்குனர். வாழ்வின் இறுதி நிலையில் இருக்கு...