வணிக ரீதியிலும் விமர்சன ரீதியிலும் வெற்றி பெற்ற ஆதித்ய வர்மா!
கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி இளைஞர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட படம் ஆதித்யவர்மா. நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்துள்ள இப்படம் ரசிகர்கள் மட்டுமல்லாமல் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் துருவ் விக்ரமின் நடிப்பும் சிறப்பான பாராட்டுக்களைப் பெற்றது. இப்படம் வணிகரீதியான வெற்றியும் பெற்று மிகச்சிறந்த ஓபனிங்கைக் கொடுத்ததால்.. ரசிகர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் படக்குழுவினர் சார்பாக நன்றி சொல்லும் விழா இன்று சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.
விழாவில் ஆதித்யவர்மா படத்தில் துருவின் நண்பராக நடித்த தனுஷ் பேசியதாவது,
"என்னை விக்ரம் சார் தான் இந்தக் கேரக்டரில் நடிக்கச் சொன்னார். துருவிடம் இப்படியொரு நடிப்பை எதிர்பார்க்கவே இல்லை. ட்ரக் அடிக்கும் காட்சிகளில் எல்லாம் அவர் அசத்தலாக நடித்திருந்தார். படத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்...
