Friday, October 23

Tag: “ரொமான்ஸ் படம் பார்த்து பார்த்து போரடித்து விட்டது” ; நமீதாவின் காக்டெய்ல் கலாட்டா

“ரொமான்ஸ் படம் பார்த்து பார்த்து போரடித்து விட்டது” – நமீதாவின் காக்டெய்ல் கலாட்டா

News
PG மீடியா ஒர்க்ஸ் சார்பில் பிரபல ஒளிப்பதிவாளர் P.G.முத்தையா-M.தீபா தயாரித்துள்ள படம் ‘காக்டெய்ல்’ இந்த படத்தை அறிமுக இயக்குநர் ரா.விஜயமுருகன் இயக்கியுள்ளார். யோகிபாபு, மற்றும் யோகிபாபுவின் நண்பர்களாக ரமேஷ், மிதுன், மற்றும் விஜய் டிவி கலக்கப்போவது யாரு புகழ் பாலா, குரேஷி, ஆகியோருடன் சாயாஜி ஷிண்டே, மனோபாலா, மைம் கோபி, லொள்ளுசபா சாமிநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அறிமுக இசையமைப்பாளர் சாய் பாஸ்கர் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை ராமாபுரத்தில் உள்ள எஸ்.ஆர்.எம் பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் எஸ்.வி.சேகர், நமீதா, அசோக் செல்வன், ஆடுகளம் முருகதாஸ், கருணாகரன், மைம் கோபி, எஸ்ஜிசி சினிமாஸ் மணிகண்டன் மற்றும் கனகராஜ், ராஜா, முகேஷ் பிலிம்ஸ் நிறுவனர் முகேஷ், லகரி ஆடியோ முருகன் உள்ளிட்ட பலர் கலந்துக...