பூஜையுடன் தொடங்கிய ‘ஆலம்பனா’ படப்பிடிப்பு!
ஆலம்பனா படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்ட போதே அப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. காரணம் அப்படத்தின் கதையம்சம் பேண்டஸி வகையைச் சார்ந்தது என்பதால்.
பிரம்மிக்க வைக்கும் அலாவுதீன் சம்பந்தப்பட்ட படங்களை குழந்தைகளும் குடும்பங்களும் கொண்டாடி இருக்கிறார்கள். அதைப் போன்ற ஒரு அபூர்வ கதையம்சத்தில் இன்றுள்ள குழந்தைகளுக்கும் இப்போதுள்ள ட்ரெண்டுக்கும் ஏற்ற வகையில் பிரம்மாண்டமாக தயாராகிறது.
kjr studios
விஸ்வாசம் படத்தை பெரியளவில் வெளியீட்டு பெரு வெற்றியை கண்ட கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸும் தயாரிப்பாளர் சந்துருவும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறார்கள். முற்றிலும் மாறுபட்ட கமர்சியல் பேண்டஸி படமாக இப்படத்தை எழுதி இயக்குகிறார் பாரி.கே.விஜய். இவர் முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை ஆகிய தரமான படங்களில் துணை மற்றும் இணை இயக்குநராக பணியாற்றிவர். மக்களை எண்டெர்டெயின்மெண்ட் பண்ணும்...

