பத்து ஆண்டுகள் பயணத்தில் YNOT ஸ்டுடியோஸ்!
ஒரு திரைப்பட தயாரிப்பு ஸ்டுடியோவாக, வித்தியாசமான திரைப்படங்களைத் தயாரிக்கும் ஒரு முன்னணி நிறுவனமாக, ஒரு தனித்துவமான பேனராக ஒரு தசாப்தத்தை நாங்கள் நிறைவு செய்திருக்கிறோம். 2010 ஆம் ஆண்டு திரைப்பட தயாரிப்பாளர் எஸ்.சஷிகாந்தால் துவங்கப்பட்ட இந்நிறுவனம் இந்த ஜனவரி மாதம் 2020ல் தனது பத்தாம் ஆண்டு நிறைவை பெருமையுடன் கொண்டாடுகிறது. இந்த பத்து ஆண்டுகளில், 18 திரைப்படங்களைத் தயாரித்திருக்கும் இந்நிறுவனம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் தயாரிப்புகளை உள்ளடக்கிய மிகச் சில தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக முன்னிலை பெற்று சிறந்து விளங்குகிறது.
ஏ.ஆர்.ரஹ்மான், ராஜ்குமார் ஹிரானி, ஆனந்த் எல் ராய் போன்ற தொழில்துறையில் சில சிறந்த ஆளுமைகள் மற்றும் திறமைகளின் ஒத்துழைப்புடன் படைப்புகளை உருவாக்கிய நிகரற்ற அனுபவத்தையும் பெற்றிருக்கிறோம்.
எங்களது முதல் தயாரிப்பாக 2010 ஆம் ஆண்டில் நடிகர் சிவா க...
