17 சர்வதேசத் திரைப்பட விழா விருதுகளைக் குவித்த ’21 கிராம்ஸ்’
இப்போது வருகிற எந்தப் படத்தைப் பார்த்தாலும் வெட்டு, குத்து, ரத்தம் என்று மனித உயிரை மலிவாகக் காட்டும் வகையில் காட்சிகள் வருவது சகஜமாகி வருகிறது.இந்த நிலையில் உயிரின் விலை மதிப்பற்றது. மனிதன் ஒருவனின் உயிரை எடுக்க யாருக்கும் உரிமையோ அதிகாரமோ கிடையாது என்கிற கருத்தை வலியுறுத்தும் வகையில் வித்தியாசமான யாரும் சொல்லாத கோணத்தில் உருவாகியுள்ள படம் தான் '21 கிராம்ஸ்'. இந்தப் படத்தை யான் சசி இயக்கி உள்ளார். அவர் ஏற்கெனவே சில படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.இந்தப் படத்தில் கதாநாயகனாக மோகணேஷ் என்கிற அறிமுக நடிகர் நடித்துள்ளார். அண்மையில் காலமான குணச்சித்திர நடிகர் பூ ராமு ஓர் அழுத்தமான கதாபாத்திரத்தின் மூலம் இந்த படத்தில் நடித்து, படம் பார்ப்பவர்கள் மனதில் நிறைகிறார்.இப்படத்திற்கு சௌந்தர்ராஜன், அன்பு டென்னிஸ் என்கிற இருவர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். இந்த இருவருக்கும் சில படங்களிலும் இணைய தொட...
