அவசியம் காண வேண்டிய ஐந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்!
புதுமையான கதைக்களன்களைக் கொண்ட தமிழ் இணையத் தொடர்கள் சமீப காலமாக ஒளிபரப்பாகத் தொடங்கியிருக்கின்றன. முன்னணி இணையவழி ஒளிபரப்பு தளமான எம்.எக்ஸ்.பிளேயர்ஸில் இலவசமாகவே கண்டு களிக்கக்கூடிய வேண்டிய சிலவற்றை இங்கே நாங்கள் பட்டியலிட்டிருக்கிறோம். நகைச்சுவை, டிராமா மற்றும் அரட்டை அரங்கம் என பரந்துபட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் வருவனவற்றில், நாங்கள் தேர்வு செய்திருக்கும் இந்த நிகழ்ச்சிகள் சுய தனிமைப்படுத்தல் என்ற இந்த காலகட்டத்தில் முழுமையான பொழுது போக்கைத் தரவல்லதாக இருக்கும்.
1. தந்தூரி இட்லி
இந்தத் தொடரின் தலைப்பே இதைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுகிறதல்லவா பிரத்யேக எம்.எக்ஸ். மற்றும் மிர்ச்சி பிளேயின் நகைச்சுவை கலந்த காதல் தொடரான இது, பணி நிமித்தமாக வட இந்தியாவிலிருந்து சென்னைக்கு வரும் பெண், இங்குள்ள அலுவலக கலாச்சாரத்திற்குள் தன்னை பொருத்தித் கொள்ள சிரமப்படுவதை விவரிக்கி...
