அமேசான் ப்ரைம் வீடியோவில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமாகும் 5 படங்கள்!
ஜோஜி முதல் யுவரத்னா வரை.. இந்த விழாக்காலத்தில் அமேசான் ப்ரைம் வீடியோவில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமாகும் 5 படங்களை உங்களின் அன்பானவர்களுடன் கண்டு மகிழுங்கள்
அல்லது
தெற்கிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 5 முத்தான திரைப்படங்களுடன் அமேசான் ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு விழாக்கால வாழ்த்துகளை உரித்தாக்குகிறது
நாடு விழாக்கோலம் தரித்திருக்கிறது. பல்வேறு பிரதேசங்களிலும் புத்தாண்டு களைகட்டத் தொடங்கியிருக்கிறது. இந்த வார இறுதியையும் உள்ளடக்கி விழாக்கால விடுமுறை வரும் நிலையில் கூடவே கரோனா பெருந்தொற்றால் ஆங்காங்கே ஊரடங்கும் ஒட்டிக் கொண்டிருக்கிறது. வேறு வழியே இல்லாது நீங்கள் வீட்டில் தொலைக்காட்சியில் வழக்கமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியைப் பார்க்க வேண்டிய சூழலுக் உருவாகியிருக்கிறது. ஒருவேளை நீங்கள் வித்தியாசமாக ஏதாவது காண விரும்பினால், உங்களுக்காக அமேசான் ப்ரைம் அண்மையில் வெளியான 5 திரைப்படங்களைத் தேர்வு செய்து ஸ...
