படம் பார்க்க A Cube புதிய மொபைல் ஆப் கண்டுபிடித்திருக்கும் நடிகர் ஜெய் ஆகாஷ் !
நடிகர் ஜெய் ஆகாஷ் தமிழில் குறிப்பிடதக்க நடிகராக விளங்குபவர். நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் கலக்குபவர். இவர் படங்கள் தமிழ் தவிர்த்து தெலுங்கு மொழியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது “அடங்காத காளை” என்னும் திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து, இயக்கிவருகிறார். மேலும் ரசிகர்கள் படம் பார்க்க A Cube எனும் புதிய மோபைல் ஆப் ஒன்றை வடிவமைத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது...
தற்போது “அடங்காத காளை” படத்தை நடித்து, தயாரித்து இயக்கியுள்ளேன். இப்படத்தில் எனக்கு அப்பா மகன் என இரு வேடங்கள். அப்பா ஒரு காவல்துறை அதிகாரி ஆனால் கெட்டவர். மகன் சாப்ட்வேர் என்ஞ்னியர் அவன் கெட்டவனா? நல்லவனா? என்பது ரகசியம். நடிகர் சாம்ஸ் எனது நண்பனாக ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். நாயகிகளாக ஆர்த்தி சுரேஷ், கவிதா, குஷி ஆகியோர் நடித்துள்ளார்கள். அப்பா வேடத்திற்கு ஜோடியாக தொலை...
