இன்றைய தலைமுறையினர் பலர் காந்தி, அம்பேத்கர் பற்றி தவறாக பேசுகிறார்கள் ; ‘A படம்’ விழாவில் லட்சுமி ராமகிருஷ்ணன் கோபம்
மாங்காடு அம்மன் மூவிஸ் தயாரிப்பில் ராஜகணபதி தயாரித்து, கதையின் நாயகனாக நடித்துள்ள படம் ‘A படம்’. அண்ணல் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இன்றைய சமூக நிகழ்வுகளை சொல்லும் படமாக உருவாகியுள்ள இந்த படத்தை இயக்குனர் கேஸ்லெஸ் சிவா.கோ என்பவர் இயக்கியுள்ளார். மேகா, சுஷ்மிதா கதாநாயகிகளாக நடிக்க, போஸ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று காலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு, நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன், இயக்குனர் தர்மசீலன் செந்தூரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளரும் நாயகனுமான ராஜகணபதி பேசும்போது, “மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியான பீம் படத்தில் அம்பேத்கராக நடித்திருந...
