Tuesday, September 1

Tag: A R Ameen

16 அடி பாயும் குட்டிப்புலி ஏ ஆர் அமீன்!

16 அடி பாயும் குட்டிப்புலி ஏ ஆர் அமீன்!

News
இசைத்துறையில் பலராலும் திறமை வாய்ந்த புதுப் பாடகர் எனக் கருதப்படும் ஏ ஆர் அமீன், தமிழில் அவரது முதல் சுயாதீன பாடலான சகோவை சோனி மியூசிக் நிறுவனத்துடன் இணைந்து வெளியிட்டுள்ளார். காதல் பற்றியும் நட்பைப் பற்றியும் பேசும் இப்பாடலுக்கு இசை மேதை ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்பாடலை விவேக் மற்றும் ஏ டி கே (ADK) இணைந்து எழுதியுள்ளனர். இப்பாடலை ஏ.ஆர் ரஹ்மான் மற்றும் ஏ ஆர் அமீன் தயாரித்துள்ளனர். இப்பாடலின் முழு வீடியோவை இயக்கி இருப்பது அமித் கிருஷ்ணன். இந்த வீடியோவில் அமீன் பாடுவது அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை கொள்ளும் விதமாக அமைந்திருக்கிறது. இப்பாடலைப் பற்றி  அமீன் கூறும்பொழுது,"நான் என் இசைப் பயணத்தை சகோ உடன் தொடங்குவதில் பெரும் மகிழ்ச்சியும் உற்சாகமும் கொள்கிறேன். இப்பாடலை தந்தையுடன் சேர்ந்து தயாரிப்பது பெரும் சவாலாக இருந்தது. ஆனால், அதே சமயம் பெரும் மகிழ்ச்சியையும் அளித்தது...