இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் தயாரிப்பில் ‘ஆகஸ்ட் 16, 1947’
ஏ.ஆர். முருகதாஸ் புரொடக்சன் தயாரித்த ஆகஸ்ட் 16, 1947' படத்தின் எக்ஸ்க்ளூசிவ் போஸ்டரை குடியரசு தினத்தன்று வெளியிடுவதில் படக்குழு பெருமிதம் கொள்கிறது!
'ஆகஸ்ட் 16, 1947' படத்தின் டீசர் ஆன்லைனில் வெளியானதில் இருந்து, இந்த எபிக் பீரியட் ட்ராமா குறித்து மேலும் தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர். கெளதம் கார்த்திக் நடித்துள்ள இந்தப் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு குடியரசு தினத்தன்று வெளியிட்டுள்ளது.
அற்புதமான கதை சொல்லியான ஏ.ஆர். முருகதாஸ் இந்த முறை தயாரிப்பாளராக மீண்டும் 'ஆகஸ்ட் 16, 1947' படத்தில் களம் இறங்கி இருக்கிறார். பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு எதிராக தைரியமாக வெகுண்டெழுந்த இந்தியர்கள் பற்றி இந்தக் கதை கூற இருக்கிறது.
கண்ணைக் கவரும்படி அமைந்துள்ள இந்த போஸ்டர் தேசபக்தி மற்றும் படத்துடைய ஆன்மாவை தாங்கி நிற்கிறது. படத்தின் முன்னணி கதாநாயகன் கையில் டார்ச்சுடனும் கண்ணில் எரியும் ...


