Friday, November 13

Tag: Aadeshbala

ஹுரோவாக நடிக்கும் ஆதேஷ் பாலா!

ஹுரோவாக நடிக்கும் ஆதேஷ் பாலா!

News
ஹுரோவாக நடிக்கும் ஆதேஷ் பாலா! ஆறு, மலைக்கோட்டை, குருவி, மம்பட்டியான்,சவரக்கத்தி, பேட்ட, உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர் ஆதேஷ் பாலா. இப்போது அந்தகன், பொன்னியின்செல்வன் உட்பட பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் நகைச்சுவை நடிகர் சிவராமனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. பெரிய திரையில் கவனிக்கத்தக்க வேடங்களில் நடித்தாலும் குறும்படங்களில் நாயகனாக நடித்துக்கொண்டிருக்கிறார். தற்போது அவர் கதையின் நாய்கனாக நடித்திருக்கும் குறும்படம், 'மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ'. இதில் நாயகியாக ஹேமா நடித்திருக்கிறார். காயத்ரி செந்தில்குமார் இயக்கியிருக்கும் இக்குறும்படத்தில் இடம்பெறும் பாடல் இன்று மாலை வெளியாகவிருக்கிறது. கண்மணி நீயே எனத் தொடங்கும் அப்பாடலுக்கு இசையமைத்து பாடியும் இருப்பவர் சார்லஸ் தனா. இவர் பேரழகி உட்பட பல படங்களுக்கு இசையமைத்தவர்....