Sunday, October 4

Tag: aadhaar movie review

ஆதார் திரைப்பட விமர்சனம்

ஆதார் திரைப்பட விமர்சனம்

Reviews
ஆதார் - திரைப்பட விமர்சனம் குழந்தை பெற்றெடுத்த கையோடு காணாமல் போன மனைவியைத் தேடி அலையும் கணவனின் கதைதான் ஆதார். கட்டிடத் தொழிலாளியான கருணாஸ் தன் நிறைமாத கர்பிணி மனைவி ரித்விகாவை பிரசவத்திற்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கிறார். கட்டுமானப் பொருள்களை திருடும் இனியாவை ஒரு முறை கையும் களவுவாகப் பிடிக்கிறார் கருணாஸ். ஆயினும் அதை மனதில் வைத்துக் கொள்ளாமல் கருணாஸ் மனைவிக்கு உதவியாக இருக்க இனியா மருத்துவமனையில் தங்குகிறார். இந்த சூழலில் குழந்தை பெற்றெடுத்த ரித்விகா திடீரென காணமல் போகிறார். மனைவியை காணவில்லை என்று காவல் நிலையத்தில் கருணாஸ் புகார் செய்ய, புலன் விசாரணையில் இறங்குகிறது போலீஸ். உதவி செய்ய உடனிருந்த இனியா பிரேதமாகக் கிடக்கிறார். கள்ளக்காதலனுடன் ரித்விகா ஓடிவிட்டதாக போலீசார் கண்டுபிடித்து (?) சொல்ல, அதை நம்ப மறுத்த கருணாஸ் கதறித் துடிக்கிறார். உண்மையில் ரித்விகா என்ன ஆனார்.....