Friday, September 18

Tag: AadhaarTamilMovie

சர்வதேச திரைப்பட விருதை வென்ற ‘ஆதார்’!

சர்வதேச திரைப்பட விருதை வென்ற ‘ஆதார்’!

News
சர்வதேச திரைப்பட விருதை வென்ற 'ஆதார்'! சென்னையில் நடைபெற்ற இருபதாவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த தமிழ் திரைப்படத் தயாரிப்பிற்கான விருதினை‌ நடிகர் கருணாஸ், நடிகர் அருண் பாண்டியன், நடிகை இனியா, நடிகை ரித்விகா, நடிகர் ‘பாகுபலி’ பிரபாகர் நடிப்பில் வெளியான 'ஆதார்' திரைப்படத்திற்கு கிடைத்திருக்கிறது. வெண்ணிலா கிரியேஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் திருமதி சசிகுமார் வழங்க, இயக்குநர் ராம்நாத் பழனி குமார் இயக்கத்தில், வெளியான திரைப்படம் 'ஆதார்'. எளிய மனிதர்களின் யதார்த்த வாழ்வியலை அழுத்தமாக பதிவு செய்திருந்த இந்தத் திரைப்படம், வெளியாகி விமர்சன ரீதியாக நல்லதொரு வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சென்னையில் டிசம்பர் 15ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெற்ற இருபதாவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில், தமிழ் படங்களுக்கான போட்டி பிரிவில் 'ஆதார்' உள்ளிட்ட 12 திரைப்படங்கள் திரையிடத் தேர்வு பெ...
இயக்குநர் ராம்நாத் பழனிக்குமாருக்கு காரை பரிசளித்த ‘ஆதார்’ பட தயாரிப்பாளர்!

இயக்குநர் ராம்நாத் பழனிக்குமாருக்கு காரை பரிசளித்த ‘ஆதார்’ பட தயாரிப்பாளர்!

News
நடிகர் கருணாஸ் கதையின் நாயகனாக நடித்த ‘ஆதார்’ திரைப்படம், சில தினங்களுக்கு முன் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளரான திருமதி சசிகுமார் இயக்குநர் ராம்நாத் பழனிக்குமாருக்கு கார் ஒன்றை பரிசாக அளித்திருக்கிறார். ‘ஆதார்’ திரைப்படத்தின் வெற்றிக்கு வித்திட்டவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா ஒன்று சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, நடிகர்கள் கருணாஸ், திலீபன், நடிகை இனியா, படத்தொகுப்பாளர் ராமர் மற்றும் படத்தினை தமிழக முழுவதும் வெளியிட்ட சக்திவேலன் ஆகியோர் கலந்து கொண்டனர். இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார் பேசுகையில், '' ‘ஆதார்’ படத்தினை இயக்கும் வாய்ப்பளித்த என்னுடைய நண்பரும், தயாரிப்பாளருமான சசிகுமார் அவர்களுக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ‘ஆதார்’ படத்தை பற்றி பத...
எளிய மனிதர்களின் வலியை விவரிக்கும் ‘ஆதார்’!

எளிய மனிதர்களின் வலியை விவரிக்கும் ‘ஆதார்’!

News
இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் நடிகர் கருணாஸ் நடிப்பில் தயாரான 'ஆதார்' திரைப்படம் தணிக்கை செய்யப்பட்டு, 'யு/ஏ 'சான்றிதழை பெற்றிருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். வெண்ணிலா கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. சசிகுமார் தயாரித்திருக்கும் திரைப்படம் 'ஆதார்'. 'அம்பாசமுத்திரம் அம்பானி', 'திருநாள்' ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் உருவான 'ஆதார்' திரைப்படத்தில் கதையின் நாயகர்களாக நடிகர் கருணாஸ், அருண்பாண்டியன், 'காலா' புகழ் திலீபன், 'பாகுபலி' புகழ் பிரபாகர், நடிகைகள் இனியா, ரித்விகா, உமா ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். ‘வடசென்னை’, ‘அசுரன்’ ஆகிய படங்களில் படத்தொகுப்பாளராக பணியாற்றிய ராமர் இந்த படத்தின்...
“சினிமாவில் கிடைக்கும் பொருளும் புகழும் வேறு எந்தத் தொழிலும் கிடைக்காது” – ‘ஆதார்’ ஆடியோ விழாவில் பாரதிராஜா!

“சினிமாவில் கிடைக்கும் பொருளும் புகழும் வேறு எந்தத் தொழிலும் கிடைக்காது” – ‘ஆதார்’ ஆடியோ விழாவில் பாரதிராஜா!

News
நடிகர் கருணாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'ஆதார்' படத்தின் இசை வெளியீடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. படத்தின் ஆடியோவை இயக்குநர் இமயம் பாரதிராஜா வெளியிட, வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்களும், படக்குழுவினரும் பெற்றுக்கொண்டனர். சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற ‘ஆதார்’ படத்தின் இசை வெளியீட்டில் இயக்குநர் இமயம் பாரதிராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவருடன் இசையமைப்பாளர் தேவா. பூச்சி முருகன், இயக்குநர் அமீர், இயக்குநர் இரா. சரவணன், தயாரிப்பாளர் தேனப்பன், நடிகரும், தயாரிப்பாளருமான அருண்பாண்டியன், படத்தின் தயாரிப்பாளர் திருமதி சசிகுமார், நடிகர் கருணாஸ் இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார், நடிகைகள் இனியா, ரித்விகா, உமா ரியாஸ்கான், ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். படத்தின் தயாரிப்பாளர் திருமதி சசிகுமார் பேசுக...