Friday, May 1

Tag: Aadhi

பிரம்மாண்டமாக உருவாகும் அகாண்டா 2: தாண்டவம்

பிரம்மாண்டமாக உருவாகும் அகாண்டா 2: தாண்டவம்

News
நந்தமுரி பாலகிருஷ்ணா, ப்ளாக்பஸ்டர் மேக்கர் போயபதி ஸ்ரீனு, ராம் அச்சந்தா, கோபி அச்சந்தா, 14 ரீல்ஸ் பிளஸ், எம் தேஜஸ்வினி நந்தமுரி வழங்கும், #BB4 அகாண்டா 2: தாண்டவம் படத்தில் ஆதி பினிசெட்டி நடிக்கிறார். இப்படத்தின் சண்டைக்காட்சிகள் தற்போது அன்னபூர்ணா ஸ்டூடியோவில் படமாக்கப்பட்டு வருகிறது. மாஸ் கடவுளாக கொண்டாடப்படும் நந்தமுரி பாலகிருஷ்ணா, பிளாக்பஸ்டர் இயக்குநர் போயபதி ஸ்ரீனுவுடன் நான்காவது முறையாக இணைந்துள்ளார், இவர்கள் கூட்டணியில் அகாண்டா 2: தாண்டவம் பிரம்மாண்டமாக உருவாகிறது. பிளாக்பஸ்டர் ஹிட் படமான அகண்டாவின் தொடர்ச்சியாக உருவாகும் இப்படம், ஆக்‌ஷன் அதிரடியில் முதல் பாகத்தைக் காட்டிலும் இன்னும் தீவிரமாக, ஆன்மீகமும் கலந்த பிரம்மாண்டமாக திரைப்படமாக உருவாகிறது. முன்னணி தயாரிப்பு நிறுவனமான 14 ரீல்ஸ் பிளஸ் பேனரின் சார்பில், ராம் அச்சந்தா மற்றும் கோபிசந்த் அச்சந்தா ஆகியோர் தயாரித்துள்ள இப்படத்தை,...
மீண்டும் இணைந்த ‘ஈரம்’ கூட்டணி!

மீண்டும் இணைந்த ‘ஈரம்’ கூட்டணி!

News
மீண்டும் இணைந்த 'ஈரம்' கூட்டணி! 7ஜி ஃபிலிம்ஸ் சிவா தயாரிக்க, இயக்குனர் அறிவழகனின் 'ஆல்பா ஃப்ரேம்ஸ்' சார்பில் இணைந்து தயாரிக்கும் ஹாரர், திரில்லர் படம் 'சப்தம்.' தனது மேக்கிங் மற்றும் கதை சொல்லலில் அனைவரையும் ஈர்த்த, வெற்றிப்பட இயக்குனர் அறிவழகன் ஈரம் படத்திற்கு அடுத்து இயக்கி இருக்கும் ஹாரர் திரில்லர் படம் இது. இதில் இயக்குனர் அறிவழகன், நடிகர் ஆதி, இசையமைப்பாளர் தமன் ஆகியோர் மீண்டும் இணைந்து இருக்கிறார்கள். ஈரம் திரைப்படம் முழுவதும் மழை மற்றும் மழை சார்ந்த காட்சிகளை மையப்படுத்தி உருவானது. இதில் சிறப்பு பேய் தண்ணீரின் வழி வரும். அதுபோல், சப்தம் திரைப்படம் மலை மற்றும் குளிர் பிரதேசம் சார்ந்த பகுதிகளை மையப்படுத்தி காட்சியமைக்கப்பட்டுள்ளது. மேலும், சப்தத்தை மையப்படுத்தியும் காட்சிகளை உருவாக்கியுள்ளனர். மும்பை, மூணாறு, சென்னை உள்ளிட்ட இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ள...
ஆதி நடித்த “சப்தம்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

ஆதி நடித்த “சப்தம்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

News
அறிவழகன் இயக்கத்தில் ஆதி நடித்து வந்த “சப்தம்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு! ஆல்பா ஃப்ரேம்ஸ் சார்பில் இயக்குனர் அறிவழகன் மற்றும் 7ஜி ஃபிலிம்ஸ் சிவா இணைந்து தயாரிக்க,  இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில், நடிகர் ஆதி நடிக்கும் திரைப்படம் “சப்தம்”. திரில்லர் படங்களை தனக்கே உரிய  தனித்த திரைக்கதையில் வெற்றிப்படங்களாக மாற்றிய அறிவழகன், இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக தனது புதிய பயணத்தை துவங்கியுள்ளார். ஈரம் படம் மூலம் அறிமுகமான இயக்குனர் அறிவழகன் தனது முதல் பட ஹீரோவான ஆதியுடன் இணைந்திருப்பது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இப்படத்தில் சிம்ரன், லைலா, லட்சுமி மேனன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஈரம் படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஹாரர் திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று...
ஆதி நடிக்கும் “கிளாப்”  படத்தில் முக்கிய வேடத்தில் பிரகாஷ் ராஜ்!

ஆதி நடிக்கும் “கிளாப்” படத்தில் முக்கிய வேடத்தில் பிரகாஷ் ராஜ்!

News
ஆதி நடிப்பில் உருவாகி வரும் “கிளாப்” படப்பிடிப்பில் அனுபவத்தில் மூத்த நடிகரான பிரகாஷ் ராஜ் இணைந்திருக்கிறார். இதனால் படக்குழுவில் அனைவரும் பெரும் உற்சாகத்துடன், மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இயக்குநர் பிரித்வி ஆதித்யா இது குறித்து கூறியதாவது... சினிமாவில் பலருக்கு முன்னுதரனமாக, மிகசிறந்த நடிகராக திகழும் பிரகாஷ் ராஜ் போன்ற நடிகரோடு பணிபுரிவது வளரும் இயக்குநர்கள் அனைவருக்குமே ஒரு பெரும் கனவு. நடிக்க ஆரம்பித்த காலத்திலிருந்தே மிகச்சிறந்த நடிகராக தன்னை அவர் வடிவமைத்து கொண்ட விதமும், அவர் தேர்ந்தெடுத்து நடித்த பாத்திரங்களில் வெளிப்படுத்திய நடிப்பும், இந்திய சினிமாவில் பன்மொழிகளிலும் அவர் பணியாற்றிய விதமும், அனைவரையும் ஆச்சர்யப்படுத்தும் பெரும்பயணம். ஒரு நடிகராக மற்றுமின்றி இயக்குநராக, தயாரிப்பாளராக, தரமான படைப்புகளை தந்து, இன்று இந்திய சினிமாவில் மிக முக்கிய ஆளுமையாக வளர்ந்து நிற்கிறார். நடி...
துரித வேகத்தில் தயாராகும் ஆதியின் “க்ளாப்”!

துரித வேகத்தில் தயாராகும் ஆதியின் “க்ளாப்”!

News
திட்டமிட்ட படியே படப்பிடிப்பை துரித வேகத்தில் நடத்துவதும், முடிப்பதும் இன்றைய காலக் கட்டத்தில் ஒரு மறைந்து போன திறமையாகவே ஆகி விட்டது என பல தயாரிப்பாளர்கள் ஆதங்கதோடு தங்கள் வலியை உணர்த்தி இருக்கிறார்கள்.  ஆதி நடிப்பில் உருவாகும் "க்ளாப்" முற்றிலும் மாறுபட்ட செய்தியை கொண்டு இருக்கிறது.. பிக் பிரிண்ட் pictures சார்பில் I B கார்த்திகேயன் தயாரிக்க, ஆதி நடிப்பில், பிருதிவி ஆதித்யா இயக்கத்தில்,உருவாகும் "க்ளாப்"  படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு  குறிப்பிட்ட நேரத்தில் முடிந்ததை பற்றி தயாரிப்பாளர் I B கார்த்திகேயன் பெருமிதத்தோடு கூறுகிறார்.  " எங்கள் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி எனக்கு. இதன் மூலம் இந்த படத்தின் ஐம்பது சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டது. திட்டமிட்ட படியே , துரித வேகத்தில் இதை செய்து முடித்ததற்கு இயக்குனர்   ...