ஆகக்கடவன_ விமர்சனம்
2009ஆம் ஆண்டு வெளிவந்த 'The hangover' என்ற ஆங்கில படம் பெண்களே நடிக்காமல் முழுக்க முழுக்க ஆண்கள் நடித்து வெளியானது.
2010 முதல் 2014 வரை ஸ்ட்ரீம் ஆன 'தி எக்ஸ்பென்டபிள்ஸ் 'என்ற வெப் சீரியஸிலும் பெண் கேரக்டரே இல்லாமல் முழுக்க முழுக்க ஆண்களே நடித்திருந்தனர் .
இந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியான 'ஆகக் கடவன' தமிழ் படம் இதே போல் முழுக்க முழுக்க ஆண்களே நடித்து வெளியான படம் என்ற சிறப்புக்குரியதாகும்
வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்து மருந்தகம் ஒன்றில் வேலை பார்க்கும் மூன்று இளைஞர்கள் நெருங்கிய நண்பர்களாகின்றனர்.
சொந்தமாக மருந்தகம் ஒன்றை நடத்த வேண்டும் என்று ஆசைப்படும் மூவருக்கும் தங்கள் முதலாளியே தன் சொந்த தேவைக்காக அந்த மருந்தகத்தை விற்பதற்கு தயாராக இருக்கிறார் என்று தெரிய வருகிறது.
எனவே மூவரும் கஷ்டப்பட்டு தங்களுக்கு தேவையான பணத்தை புரட்டித் தயாராக வைத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் எதிர...
