‘ஆலம்பனா’ படத்தில் பூதமாக நடிக்கும் முனீஸ்காந்த்!
பூதமாக முனீஸ்காந்த்; தொடர் 72 மணி நேரப் படப்பிடிப்பு:
'ஆலம்பனா' ரகசியம் பகிரும் இயக்குநர் பாரி கே.விஜய்!
தமிழ்த் திரையுலகில் வித்தியாசமான அதிலும் குழந்தைகளை உற்சாகப்படுத்தும் படங்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உண்டு. குழந்தைகளைப் பெற்றோர்கள் தான் திரையரங்கிற்கு அழைத்து வரவேண்டும் என்பதால், அவர்களைக் கவர்வது மிகவும் கடினம். இந்தக் கவரும் யுக்தியை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலமாகவே செய்திருக்கிறது 'ஆலம்பனா' படக்குழு. இந்தப் படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் தயாரிப்பாளர் சந்துரு இணைந்து பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளனர்.
இதற்கு முன்பாக பேண்டஸி கான்செப்ட் படம் என்பதை மட்டுமே தகவலாக படக்குழு தெரிவித்தது. தற்போது ஃபர்ஸ்ட் லுக் மூலமாகக் குழந்தைகள் முதல் முதியோர் வரை குஷிப்படுத்தும் பூதத்தை மையப்படுத்திய விதமாக 'ஆலம்பனா' உருவாகியுள்ளது தெரியவந்துள்ளது. இதில் பூத...


