ஆரி அர்ஜுனன் நடிக்கும் “பகவான்”
பிக்பாஸ் மூலம் மக்களின் இதயங்களை வென்ற நடிகர் ஆரி அர்ஜுனன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் பகவான் திரைப்படத்திற்காக மிகப்பிரமாண்டமான பாடல் காட்சி கலா மாஸ்டர் நடன அமைப்பில் படமாக்கப்பட்டுள்ளது.
காளிங்கன் இயக்கத்தில் AMMANYA MOVIES சார்பில் C.V. மஞ்சுநாதா தயாரிக்கும் திரைப்படம் “பகவான்” மித்தாலஜிகல் திரில்லர் வகையில் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் மக்களின் நாயகன் ஆரி அர்ஜுனன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியானபோதே பெரும் வரவேற்பை பெற்றது. இதுவரையிலும் தோன்றியிராத வகையில் வித்தியாசமான தோற்றத்தில் இப்படத்தில் ஆரி அர்ஜுனன் நடித்திருக்கிறார். ரசிகர்களை இருக்கை நுனியில் இருத்தி வைக்கும் பரபர திரில்லர் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. சமீபத்தில் இப்படத்திற்காக கலா மாஸ்டர் நடன அமைப்பில், மிகப்பிரமாண்ட பாடல் காட்சி படமாக்கப்...


