ஆரி லக்ஷ்மி மேனன் ஜோடி சேரும் திரைப்படம்
ஆரி லக்ஷ்மி மேனன் ஜோடி சேரும் திரைப்படம்!
மெட்ராஸ் டெக் நிறுவனம் தனது முதல் படைப்பாக, புதிய திரைப்படம் ஒன்றைத் தயாரிக்கிறது!!
உண்மைச் சம்பவம் ஒன்றை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டுள்ள திரைக்கதை, விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை மிகமிக யதார்த்தமாக பதிவு செய்துள்ளது. மூட நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துகளும் இதில் இடம் பெற்றுள்ளன.
ஆரி கதாநாயகனாக நடிக்கும் இத்திரைப்படத்தில் லக்ஷ்மி மேனன் கதாநாயகியாக நடிக்கிறார். 'மைம்'கோபி, வையாபுரி, 'ப்ளாக்'பாண்டி, 'ஜெயிலர்' தன்ராஜ், ஷெர்லி பபித்ரா, கனிமொழி போன்றோருடன் தமிழ்த் திரையுலகின் முக்கியமான நடிகர் ஒருவர் வித்தியாசமான கதாபாத்திரத்தில் தோன்றுகிறார்.
புதிய இசையமைப்பாளரின் இசையில், கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார். செம்பூர் கே.ஜெயராஜ், ராஜசேகர பாண்டியன் வசனம் எழுதியுள்ளனர்.
படத்தொகுப்பு கெவின் ரிச்சர்ட், கலை இயக்குநராக சுரேஷ் கல்ல...








