Saturday, September 26

Tag: Aattral review

கேப்டன் மில்லர் _ விமர்சனம்

கேப்டன் மில்லர் _ விமர்சனம்

Reviews
கேப்டன் மில்லர் _ விமர்சனம் வெள்ளையர் கால ஆட்சியில் நடக்கும் கதைக் களம். ஜெயபிரகாஷூம் அவரது மகன் ஜான் கொக்கன் இருவரும் ஜமீன்தார்கள். வெள்ளையர்களுக்கு அடங்கி, குறிப்பிட்ட பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அப்பகுதியி்ல் உள்ள. கோயிலுக்குள், ஒடுக்கப்பட்ட மக்கள் நுழையக் கூடாது என சாதி வெறியுடன் செயல்படுகிறார்கள். இன்னொரு பக்கம், இவர்களது அதிகாரத்தை ஒழிக்க போராளி இயக்கத்தில் செயல்படுகிறார் சிவராஜ்குமார். தனது தம்பி தனுஷையும் இயக்கத்துக்கு அழைக்கிறார். அவரோ, சுதந்திரத்தை வாங்கி இந்த ராஜாவுக்குத் தானே கொடுக்கப் போற அவனுங்க நம்மள கோயில் உள்ளே விட மறுக்கின்றனர். நான் பட்டாளத்துல போய் சேரப்போறேன் என ஆங்கிலேயர்களின் பட்டாளத்தில் தனுஷ் சேர்கிறார். இதற்கிடையே, பிரியங்கா மோகனனும் போராளிகளின் இயக்கத்தில் சேர்கிறார். அவரை கொல்ல ஜமீன்தார் ஜெயபிரகாஷ் ஆட்கள் முயல்கிறார். அப்போது ப்ரியங்காவை தனுஷ்...
ஆற்றல் – திரைப்பட விமர்சனம்

ஆற்றல் – திரைப்பட விமர்சனம்

Reviews
ஆற்றல் - திரைப்பட விமர்சனம் பெரும்பாலும் மிருதுவான வேடங்களிலேயே வரும் விதார்த் அதிரடி ஆக்ஷன் வேடத்தில் ஆற்றல் காட்டியிருக்கும் படம்தான் ஆற்றல். ஓட்டுனர் இன்றி தானே இயங்கும் கார் ஒன்றை உருவாக்கும் முயற்சில் இருக்கிறார் விதார்த். இதற்காக அவருக்கு பத்து லட்சம் ரூபாய் பணம் தேவைப்படுகிறது. விதார்த்தின் தந்தை சார்லி, மகனுக்காக பைனான்ஸியரிடம் பணம் கடன் வாங்கி வருகிறார். ஆனால் பணத்தை மகனிடம் கொடுப்பதற்கு முன்பே அவர் கொலை செய்யப்படுகிறார். பணமும் கொள்ளை போகிறது. இதே சமயம் நகரில் ஆங்காங்கே முகமூடி கொள்ளை சம்பவங்கள் தொடர் கதையாகி வருகின்றன. கொள்ளையடித்துவிட்டு கொலை செய்வது இந்த கொள்ளை கும்பலின் வாடிக்கை. ஒரு நாள் கண்ணெதிரே நடுரோட்டில் முதியவர் ஒருவரைக் கொன்று அவரிடமிருந்து முகமூடி கும்பல் பணத்தை கொள்ளையடிப்பதைப் பார்க்கிறார் விதார்த். கொள்ளையர்களைத் துரத்திச் சென்று பணத்தை மீட்டு...